Tuesday, April 30, 2013
அதிரையின் அசர வைக்கும் விருந்து உபசரிப்பு !
'பந்திக்கு முந்து படைக்கு பிந்து' என்ற பழமொழி எதற்கு கூறினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதிரையரின் உபசரிப்புக்காக மாத்திரம் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளாத்தான் இவை இருக்கும் என நான் கருதியதுண்டு. அந்தளவிற்கு விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற ஊர்களில் நமதூரும் ஒன்று. உற்றார் - உறவினர்- நண்பர்கள் படை சூழ வந்திருந்த அனைவருக்கும் சகோதரத்துவ அன்பை வெளிப்படுத்தும் விதமாக அருகிலே நின்று விருந்து உபசரிக்கப்படுகின்றன.
நமதூரில் எவ்வாறெல்லாம் விருந்துகள் உபசரிக்கப்படுகின்றது ?
1. திருமண வலீமா விருந்து
2. வீடு குடிபுகுதல் விருந்து
3. விருந்தாளிகளுக்கு வைக்கப்படும் விருந்து
4. நண்பர்களுக்கு வைக்கப்படும் விருந்து
5. ஹஜ் செல்லும்போதும் / முடித்துவிட்டு வரும்போதும் வைக்கப்படுகின்ற விருந்து
6. பெருநாள் விருந்து
7. குழந்தை பிறப்பு
என இவ்வாறெல்லாம் விருந்துகள் உபசரிக்கப்படுகிறது.
லுஹர்த் தொழுகை முடித்தவுடன் வைபவங்கள் நடக்கும் வீட்டின் அருகிலே பந்தல் அமைக்கப்பட்டு அல்லது திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இம்மதிய விருந்துகள் உற்றார் - உறவினர்- நண்பர்கள் ஆகியோருக்கு உபசரிக்கப்படுகின்றன.
ஊரிலே கலரி விருந்து என்றொரு பெயரிலும் இவற்றை அழைப்பதுண்டு.
இஸ்லாத்தின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஏழை !?, பணக்காரான் !?, தெருக்கள் - குடும்ப பீலிங் !? என்றப் பாகுபாடுகள் இல்லாமல் தமிழகத்திலேயே சஹனில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடிய ஊர்களில் நமதூரும் ஒன்றாக இருக்கிறது.
அஞ்சு கறி என்ற பெயரில் விருப்பமாக அழைக்கப்படும் இந்த உணவை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இவை சீராகச் சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர் ரக அரிசியில் தயாரிக்கப்படுகிற கம கம மணத்துடன் நெய்ச் சோறு, செம்மறி ஆட்டுக்கறியில் கூடுதல் ஆயில் ( ! ) இட்டு தயாரிக்கப்படுகிற கறி ஆணம், நாவிற்கு சுவையைக்கூட்ட நாட்டுக் கத்தரிக்காயில் பச்சடி, உருளையில் குருமா, செரிமானத்திற்கு என்று சொல்லியே ( ! ? ) அனைவரும் விரும்பி பருகக்கூடிய புளியானம் ( ரசம் ) போன்றவை ஒரு வகையாகவும்...
மற்றொறு வகையாக பிரியாணி ! நமதூருக்கே பெருமை சேர்க்கக்கூடிய உணவாகவும் அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணக்கூடியதாகவும் உள்ளது. இவை சீராகச் சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர் ரக அரிசியில் சமமான அளவு செம்மறி ஆட்டுக்கறிச் சேர்த்து தயாரிக்கப்படுகிறப் பிரியாணி சுவையாகவும், நறுமண மிக்கதாகும் இருக்கும். மேலும் கூடுதலாக துண்டுகளிட்ட பொரிச்ச கோழி, வெங்காயத் தயிர் ஊறுகாய், எலுமிச்சை கலரி ஊறுகாய் போன்றவைகள் இவற்றில் இடம்பெற்றிருப்பது வயிறார உண்பதற்கு கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.
தால்ச்சா ! இதன் ருசியே தனி, அஞ்சு கறி, பிரியாணி போன்ற உணவிற்கு கூடுதல் இணைப்பாக அதில் இடம்பெற்றிருக்கும்.
இனிப்பு வகைகளாக...
1. சேமியாவில் தயாரிக்கப்படுகிற பிர்னி
2. பீட்ரூட்டில் தயாரிக்கப்படுகிற இனிப்பு
3. கோதுமையில் தயாரிக்கப்படுகிற இனிப்பு
4. ரவாவில் தயாரிக்கப்படுகிற கேசரி
5. பேரிட்சை பழத்தில் தயாரிக்கப்படுகிற இனிப்பு
போன்றவற்றில் ஏதாவது ஒன்று அஞ்சு கறி மற்றும் பிரியாணி உணவில் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் ஒவ்வொரு சஹனிலும் மூன்று தண்ணிர்ப் பாக்கெட்கள் அதில் வைக்கப்பட்டிருக்கும்.
அஞ்சு கறி, பிரியாணி போன்ற உணவுகள் திருமண நிகழ்ச்சிகள், வீடு குடி புகுதல், ஹஜ் செல்லும்போது / முடித்துவிட்டு வரும்போது போன்ற நிகழ்வுகளில் மதிய உணவாக ஒவ்வொரு சஹனிலும் தலா மூவர் வீதம் அமர்ந்து பரிமாறுவார்கள்.
மறு சோறு போதும்... போதும்... எனச்சொல்லும் அளவுக்கு அனைவருக்கும் வழங்கி தங்களின் சகோதரத்துவ அன்பைக் காட்டுவார்கள்.
வாங்க காக்கா !
பேப்பரு தாங்க...
மூணு பேரா உட்காருங்க...
அங்கே ஒரு சஹன் வைங்க !
எங்கே தால்ச்சா ?
இங்கே சோறு பத்தலே...
எங்கே மறுசோறு ?
இன்னொரு சுவீட் எடுத்துத் தாங்க !
என இதுபோன்ற பழக்கப்பட்ட சந்தோஷக் குரல்கள் கலரிச் சாப்பாட்டில் அங்காங்கே ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்...
என்ன சகோதரர்களே ! உங்களுக்கும் அப்படி ஒலித்ததா !?
கவனத்தில் கொள்ளவேண்டியவை :
வைபவங்கள் நடக்கும் வீட்டில் நடைபெறும் விருந்து உபசரிப்புகளில் வீணாக உணவு விரையமாக்கப்படுவது மிகவும் சிந்திக்க + வேதனைப்பட வேண்டிய ஒன்றாகும். உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்மிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண் விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாகும். உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் பிள்ளைகளின் மனதில் போட்டு விதைப்போம். நாளை அது செழித்து வளர்ந்து சமூக அக்கரை உள்ள குடிமக்களை உருவாக்கும். ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பதுதான் சிறந்தது என்பதை அனைவரும் உணருவோம்.
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

Monday, April 29, 2013
தக்வா பள்ளி விவகாரம் : தன்னிச்சையாக முடிவா !? விளக்கம் கேட்டு நோட்டிஸ் !
கடந்த [ 19-04-2013 ] அன்று அதிரை தக்வாப் பள்ளி நிர்வாகிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட தீர்மானங்கள் தன்னிச்சையாக எடுக்கப்பட்டதாகவும், எங்களை கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், அதற்கு விளக்கம் கேட்டு தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஒரு உறுப்பினர் ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தக்வாப் பள்ளி நிர்வாகத்தின் இதர உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளியிலிருந்து பேராசிரியர்கள் அப்துல் காதர், பர்கத் ஆகியோர் பணியிலிருந்து விடுவிப்பு !
அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திறம்பட இயங்கி கல்வியில் பின்தங்கிய அதிரை மற்றும் அதனை சுற்றி வசித்து வருகின்ற மாணவ மாணவியருக்கு கல்வி புகட்டுதலில் முன்னோடியாக திகழ்ந்து வருகின்றது.
இப்பள்ளி டிரஸ்டின் கீழ் இயங்கி வந்தாலும் அதன் நிர்வாகிகள் பள்ளியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்குரிய நடவடிக்கைகளில் மும்முரமாகியுள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் அவர்கள், அதே போல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் பேராசிரியர் பர்கத் அவர்கள். இவர்கள் இருவரும் வருகின்ற [ 30-04-2013 ] அன்று முதல் பணியிலிருந்து விடுவிக்கப்பட உள்ளனர்.

Sunday, April 28, 2013
அதிரையில் வர்த்தக பொருட்காட்சியின் அரங்கு பொதுமக்களின் பார்வைக்கு இன்று திறப்பு !
வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பினர் [ ATCO ] அதிரையில் நடத்தும் மாபெரும் பொருட்காட்சியின் அரங்கு இன்று [28-04-2013 ] மாலை 6 மணி முதல் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டது.
முன்னதாக அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் தலைவர் MMS. சேக் நசுருதீன் அவர்களின் முன்னிலையில் அதிரை பேரூராட்சியின் தலைவர் SH. அஸ்லம் அவர்கள் பொருட்காட்சியை திறந்து வைத்தார்.
முதல்நாளில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பொதுமக்களை அரங்கிற்குள் இலவசமாக அனுமதித்தனர் நிர்வாகத்தினர். இந்த பொருட்காட்சியில் பல்வேறு நிறுவனத்தினரின் ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன.

[ Click on Image to enlarge ]
காதிர் முகைதீன் கல்லூரியில் 58 வது ஆண்டு விழா நிகழ்ச்சி !
அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று [ 28-04-2013 ] காலை 10.30 மணியளவில் கல்லூரியின் கலையரங்கத்தில் 58 வது ஆண்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியின் நிரல் :
1. கிராத் : வணிக ஆட்சியல் துறை பேராசிரியர் A. முஹம்மது சித்திக் அவர்கள்.
2. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் A.M. உதுமான் முகைதீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
3. கல்லூரியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை ஆண்டரிக்கையாக தொகுத்து வழங்கினார் கல்லூரி முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்கள்.
4. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட MKN ட்ரஸ்டின் தற்காலிக நிர்வாகி நீதியரசர் K. சம்பத் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்.
5. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் V. மாணிக்க வாசகம் அவர்களால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டு, தேர்வில் பல்கலைக்கழக அளவில் சாதனை படைத்த மாணவ மாணவியருக்கும், மற்றும் பேச்சு, பொது அறிவு, கட்டுரை ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.
6. வணிகவியல் துறை தலைவர் முனைவர் M. சீனி முஹம்மது, வேதியியல் துறைத் தலைவர் முனைவர் T. இதயதுல்லாக்கான், வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் G. பாலசுப்பிரமணியன் ஆகியோரின் பணி நிறைவு அடைந்ததைத் தொடர்ந்து அவர்களுடைய பணிகளை நினைவுகூர்ந்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.
7. நிகழ்ச்சியின் இறுதியில் கணினித்துறைத் தலைவர் முனைவர் N. செயவீரன் அவர்களால் நன்றியுரை வாசிக்கப்பட்டது.
8. நிகழ்ச்சிகள் அனைத்தையும் மேஜர் முனைவர் கணபதி அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள், காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
[ Click on image to enlarge ]

மரண அறிவிப்பு [ கீழத்தெரு ஹபீப் முஹம்மது மருமகன் ]
கீழத்தெருவைச் சார்ந்த ஹபீப் முஹம்மது அவர்களின் மருமகனும், மதுக்கூரைச் சேர்ந்த மர்ஹூம் செய்யது இப்ராஹீம் அவர்களின் மகனாரும், முஜிபூர் ரஹ்மான், முஹம்மது அலி ஆகியோரின் மச்சானுமாகிய பகுருதீன் அவர்கள் மதுக்கூரில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.
தக்வாப் பள்ளி நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் !
நேற்று [ 27-04-0213 ] காலை 10 மணியளவில் தக்வாப் பள்ளியின் அலுவலகத்தில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தக்வா பள்ளியின் நிர்வாகத் தலைவர் K.S. அப்துல் சுக்கூர் அவர்கள் தலைமை வகித்தார்.
அக்கூட்டத்தில் கடந்த [ 19-04-2013 ] வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் கூட்டப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பள்ளியில் மார்க்கப் பயான் நடத்துவதற்கு 'உலமாக்கள் சபை' மூலம் ஒப்புதல் கடிதம் பெற்ற பிறகு அனுமதி வழங்குவது என்ற தீர்மானம் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது என்றும், இந்த தீர்மானத்தை மீறும் விதமாக நிர்வாக முடிவுக்கு எதிராக செயல்படுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர்.
மேலும் இந்த ஒரு பிரச்னையால் தக்வா பள்ளி மற்றும் மீன் மார்கெட் ஆகியவற்றின் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்று பள்ளியின் நிர்வாகிகள் குறைபட்டுக்கொண்டனர்.

Saturday, April 27, 2013
த.மு.மு.க அதிரை கிளை நடத்திய மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் !
த.மு.மு.க அதிரை கிளையின் சார்பாக தொடர்ந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுபவதை கண்டித்து மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று [ 27-04-2013 ] மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.
த.மு.மு.க வின் தஞ்சை மாவட்டத் [ தெற்கு ] தலைவர் ஜப்பார் அவர்கள் தலைமை வகிக்க, த.மு.மு.க வின் மாநில பொதுச்செயலாளர் P. அப்துல் சமது அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.
[ Click on Image to enlarge ]
த.மு.மு.க வின் தஞ்சை மாவட்டத் [ தெற்கு ] தலைவர் ஜப்பார் அவர்கள் தலைமை வகிக்க, த.மு.மு.க வின் மாநில பொதுச்செயலாளர் P. அப்துல் சமது அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.
முன்னதாக பேரணி தக்வாப் பள்ளி அருகிலிருந்து புறப்பட்டு கடைத்தெரு, பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு வழியாக அதிரை பேருந்து நிலையத்தை அடைந்தது. இதைத்தொடர்ந்து பெரும் திரளானோர் கலந்து கொண்ட இந்தக்கூட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. குறிப்பாக பெங்களூரில் கடந்த சில தினங்களுக்கு முன் பாரதிய ஜனதா அலுவலகம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாததால் தமிழகத்தை சேர்ந்த அப்பாவி முஸ்லிம்கள் மேலப்பாளையம் கிச்சான் புகாரி மற்றும் சில இளைஞர்களை கைது செய்துள்ளனர் என்றும், கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நாடகத்தை சேர்ந்தே நடத்தியுள்ளனர் என்றும், இவற்றையெல்லாம் மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டவும், தொடர்ந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக காட்டும் காவல்துறையினரின் போக்கை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் த.மு.மு.க வின் நகர பொருளாளர் M.O. செய்யது முஹம்மது புகாரி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க அதிரை கிளையின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் த.மு.மு.க நிர்வாகிகள் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
Subscribe to:
Posts (Atom)