.

Pages

Sunday, April 21, 2013

காதிர் முகைதீன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று [ 21-04-2013 ] காலை 10.30 மணியளவில் கல்லூரியின் கலையரங்கில் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
[ Click on Image to Enlarge ]



நிகழ்ச்சியின் நிரல் :

1. கிராத் : பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் அவர்கள்.

2. வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர் இதயதுல்லாகான் அவர்கள்
வரவேற்புரை நிகழ்த்தினார்.

3. பட்டங்கள் பெற இருக்கின்ற மாணவ மாணவியருக்கு உறுதிமொழி கல்லூரி முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்களால் எடுக்கப்பட்டது.

4. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட MKN ட்ரஸ்டின் தற்காலிக நிர்வாகி நீதியரசர் K. சம்பத் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்.

5. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருச்சி மண்டல கல்லூரி இணை இயக்குனர் முனைவர் A. வீரமணி அவர்களால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.

6. நிகழ்ச்சியின் இறுதியில் கல்லுரியின் துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் அவர்களால் நன்றியுரை வாசிக்கப்பட்டது.

7. நிகழ்ச்சிகள் அனைத்தையும் மேஜர் முனைவர் கணபதி அவர்கள் தொகுத்து வழங்கினார்.






இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள், காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விழாவின் துளிகள் :

1. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் பட்டங்கள் பெறும் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.

2. பல்வேறுப் பாடப்பிரிவுகளில் தரங்கள் மற்றும் பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவிகள் உட்பட மொத்தம் 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

3. புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் இந்த அரங்கம் வருடம் தோறும் எண்ணற்ற பட்டதாரிகளை அனுப்பிக்கொண்டு வருகின்றன என்ற சிறப்பை பெற்று வருகின்றது.

பட்டங்கள் பெற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் அதிரை நியூஸ் குழுமத்தின் சார்பாக வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

மேலும் "மனிதநேயம்", "சகோதரத்துவம்" ,"சமுதாய விழிப்புணர்வு" ஆகியவற்றில் என்றென்றும் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.

9 comments:

  1. பட்டங்கள் பெற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் என் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

    மேலும் "மனிதநேயம்", "சகோதரத்துவம்" ,"சமுதாய விழிப்புணர்வு" ஆகியவற்றில் என்றென்றும் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  2. பட்டங்கள் பெற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் என் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

    ReplyDelete
  3. பட்டம் பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.

    பெற்ற பட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் இன்னும் பல சாதித்து சாதனையாளர்களாக திகழ மீண்டும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பட்டம் பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. பட்டம் பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. பட்டம் பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் பல..

    ReplyDelete
  7. பட்டம் பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் பல

    ReplyDelete
  8. புதிய பட்டதாரிகளுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. thank u. athil nanum pattam petrullen

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.