.

Pages

Saturday, April 13, 2013

இலண்டன் தமிழ் வானொலியில் அதிரை மெய்சா அவர்களின் கவிதை [ காணொளி ] !

இலண்டன் தமிழ் வானொலி தனது கவிதைகளை வாடிக்கையாக ஒளிபரப்புச் செய்வதன் மூலம் அதிரையருக்கு முன்னோடியாகவும், எதிர்கால தலைமுறையினருக்கு நல்லதொரு வழிகாட்டியாகவும் திகழ்ந்து கொண்டுருக்கின்ற 'கவியன்பன்' அபுல் கலாம் அவர்களின் வரிசையில் அதிரை மெய்சா அவர்களின்  'ஏங்கி நின்றான் !' என்ற தலைப்பிட்ட விழிப்புணர்வுக் கவிதையை இலண்டன் தமிழ் வானொலியில் கடந்த [ 11-04-2013 ] அன்று ஒளிப்பரப்பு செய்தது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.

இவரைப்பற்றிய சிறு குறிப்பு :
'மெய்சா' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் இவரின் இயற்பெயர் A. முகைதீன் சாகிப். அதிரை நடுத்தெருவை பிறப்பிடமாய் கொண்டாலும் கீழத்தெருவை இருப்பிடமாய் பெற்று தற்போது வசிப்பிடமாய் மேலத்தெரு சானா வயலில் குடியமர்ந்து, அமீரகத்தில் பணிபுரிந்து வருகின்றார்.

சிறுவயது முதல் கவிதை - கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உள்ள இவர் சமூக விழிப்புணர்வு பக்கங்களில் தொடர்ந்து விழிப்புணர்வூட்டும் ஆக்கங்கள் / கவிதைகள் எழுதி பலரின் பாராட்டை பெற்று வருகின்றார். மேலும் உள்ளூர் நிகழ்வுகளை உடனுக்குடன் பதிந்து வரும் வலைதளமாகிய 'அதிரை நியூஸ்'  குழுமத்தில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.

இலண்டன் வானொலியிலும் இவருடைய கவிதைக்கு அங்கீகாரம் கிடைத்து வாசித்திருப்பது நமதூருக்கு மட்டுமல்லாமல் எதிர்கால புதிய தலைமுறையினரின் எழுத்தார்வத்தைத் தூண்டுகின்ற விதமாக அமைந்துருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளன.

அதிரை நியூஸ் குழுமத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.


 

ஏங்கி நின்றான் ! ஏக்கம் தொடர்கிறது…
பள்ளிப்பருவத்து முன்பருவத்தில்
பகல் உணவில் கூட பால் தந்த
அந்த அன்னையின் பாசம்
இன்று தூரமாகி போனதை எண்ணி
ஏங்கி நின்றான் !

பள்ளிப்பருவம் எட்டியதும்
பார்ப்போர் வியக்க பணிவிடை செய்து
பாடசாலை அனுப்பி வைத்த காட்சி நினைத்து
ஏங்கி நின்றான் !

படித்தது போதும் என்று
பாதிலேயே கல்வி விட்டு
பன்னாட்டு விமான நிலையம் கண்டு
புலம்பெயரும் கனவு சுமந்து
பாசத்தை தூரமாக்கி
ஏங்கி நின்றான் !

வாப்பா பார்த்து, உம்மா பார்த்து
வரதட்சணை கண் மறைத்து
வாயாடிப்பெண்ணை மணந்து
அன்புக்காக
ஏங்கி நின்றான் !

வாப்பாவை பார்க்காமலே
வாப்பாவின் பாசம் அறியாமலே
மூன்றுவயதை தொடும்போது
தாயகம் போய்
தான் ஈன்ற தங்கப்பிள்ளை
தன்னிடம் வருமா என்று
ஏங்கி நின்றான் !

சுற்றித்திரிந்த காலங்களில்
சுதந்திரம் கற்றுத்தந்து
பட்ட கஸ்டங்களில்
பாதி பங்கெடுத்த
அன்பு நண்பர்களை பிரிந்து
ஏங்கி நின்றான் !
.
அயல்நாட்டு நிரந்தர வாழ்க்கை
நிரந்தரமாக அந்நியமாகி
அனாதை போல் வாழ்ந்து விட்டு
முதுமை அடைந்தும் அறியாமல்
முடியாமல் ஊர் திரும்பும் காலம் வந்து
உறவுக்காகவும்
உண்மையான அன்புக்காகவும்
ஏங்கி நின்றான் !

9 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    சகோ அதிரை மெய்சா அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    சிந்தனையின் எல்லைகள் பெருக வேண்டும், சிந்திபோரின் உள்ளங்களும் கவர வேண்டும்,
    நட்பு வட்டாரம் திகைக்க வேண்டும்,
    மானிட வாழ்க்கையின் தரம் மலர வேண்டும்,
    அதைக் கண்டு இந்த வையகம் சிரிக்க வேண்டும்,
    வேண்டும் வேண்டும் இன்னும் பெருக வேண்டும்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. வாழ்த்துகள் அன்புச் சகோதரர் அதிரை மெய்சா அவர்களுக்கு

    தொடரட்டும் உங்களின் எழுத்துப்பணி என்றென்றும்...

    ReplyDelete
  3. எட்டாத உயரத்தையும் எட்டி பிடித்த எங்கள் அதிரை மெய்ஷா முதல் முறையாக லண்டன் தமிழ் வானொலியில் பதிவு செய்த கவிதை வரிகள் அருமை.இந்த பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நம் சமுதாய மக்கள் யாவற்றிலும் விழிப்புணர்வு பெறவேண்டும். அதற்க்கு நம் அனைவர்களும் அவரவர் பங்க்குக்கு அறிந்த தெரிந்த செய்திகளை பகிந்து கொள்ளவேண்டும். என்பதை நோக்கமாகக்கொண்டு எனக்கு தெரிந்தவற்றை தாங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆதரித்து அரவணைத்த அனைத்து நண்பர்கள் சகோதரர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  5. வாழ்த்துகள் கவிஞரே!

    ReplyDelete
  6. வாழ்த்துகள் அன்புச் சகோதரர் அதிரை மெய்சா அவர்களுக்கு

    தொடரட்டும் உங்களின் எழுத்துப்பணி என்றென்றும்

    ReplyDelete
  7. காலத்திற்கு ஏற்ப பதிவு செய்த கவிதை
    வாழ்த்துகள் இன்னும் தொடர....

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் அன்பு சகோ அதிரை மெய் சா

    அவர்களே ..இன்னும் நல்ல பல கவிகள்

    அரங்கேற வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.