.

Pages

Friday, April 19, 2013

அதிரை தவ்ஹீத் ஜமாத்தின் கோடைகால இலவச பயிற்சி முகாம் !

கடந்த ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும் மாணவ மாணவியர்கள் கோடைகால விடுமுறையை நல்ல வழியில் செலவிட  அதிரை தவ்ஹீத் ஜமாத் நிர்வாகத்தினர் மாணவ மாணவியர்களுக்காக மார்க்க அடிப்படையிலான கோடைகால இலவச பயிற்சி முகாம்களை வருகின்ற [ 25-04-2013 ] முதல் [ 05-05-2013 ] வரை அதிரை தவ்ஹீத் பள்ளியின் கட்டிட வளாகத்தில் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

1. குர்ஆன் / ஹதீஸ் அடிப்படையிலான பாடத்திட்டங்களைக் கொண்டு அளிக்கப்படும் பயிற்சிகளின் விவரங்கள் :

* இஸ்லாமிய அடிப்படை கல்வி

* இஸ்லாமிய ஒழுக்க பயிற்சி

* அன்றாடம் செய்ய வேண்டிய கடமைகள்

* இஸ்லாமிய அழைப்புபணி

* இஸ்லாமிய சரித்திரம்

* உண்ணும் முதல் உறங்கும் வரையிலான ஒழுக்கங்கள்

2. ஆறாம் வகுப்பு முதல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை ஆலிம்கள் மூலம் பயிற்சி முகாம் நடைபெறும்.

3. ஆறாம் வகுப்பு  முதல் கல்வி பயிலும் மாணவியர் மற்றும் வீட்டுப் பெண்கள் ஆகியோருக்கு மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆலிமாக்கள் மூலம் பயிற்சி முகாம் நடைபெறும்.

4. பயிற்சி முகாமின் இறுதியில் தேர்வு வைத்து வெற்றி பெரும் மாணவ மாணவியருக்கு சான்றிதழ்களோடு பரிசுகள் வழங்கப்படும்.

5. மேலும் பயிற்சி முகாமில் பங்கு பெரும் மாணவ மாணவியருக்கு சிற்றுண்டி காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி முகாமில் பங்கு பெற இன்று [ 19-04-2013 ] முதல் விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்கள் தொடர்புக்கு :
சகோ. பீர் முஹம்மது [ 8015379211 ]
சகோ. அன்வர் அலி  [ 9629115317 ]
சகோ. மீரா முகைதீன் [ 9944824510 ]
சகோ. சுலைமான் [ 9500299337 ]

4 comments:

  1. பயனுள்ள பதிவு.

    பதிந்தமைக்கு நன்றி.

    இக்கோடை காலத்தை மாணவ மாணவியர் பயனுள்ள வழியில் கழித்திட இவ்வாய்ப்பை பயன்படுத்துக்கொள்ளலாம்..

    ReplyDelete
  2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீண்ட காலமாக, கோடை காலப் பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றது.இந்த முகாம்களில் தங்கள் குழந்தைகளை அனுப்பி அவர்களது கோடை கால விடுமுறையை மார்க்கக் கல்வி, ஒழுக்க வாழ்க்கை போன்றவற்றைப் பெறுகின்ற வாய்ப்பாக ஆக்கிக் கொள்ளவும்.

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு.

    நல்ல முயற்ச்சி வாழ்க வளர்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.