.

Pages

Wednesday, April 10, 2013

துபாயில் நிலநடுக்கம் ! அதிர்ச்சியில் மக்கள் !

Image credit : Gulfnews

Image credit : khaleejtimes

ஈரானின் முதல் அணுமின் உற்பத்தி நிலையம் புஷேர் நகரில் செயல்பட்டு வருகிறது. அந்த இடத்தின் அருகே இன்று மாலை 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

துறைமுக நகரமான புஷேரில் இருந்து 60 மைல்கள் தெற்கில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், அப்போது 6.1 ரிக்டர் ஆக பதிவானதாகவும் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் உள்ள ஈரான் நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.

ஈரான் மட்டுமின்றி, துபாய், ஷார்ஜா மற்றும் பிற அமீரக நாடுகள் முழுவதும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் பொதுமக்கள் வீடுகளை விட்டு அவசரம் அவசரமாக வெளியேறி திறந்த வெளிக்கு வந்தனர்.

துபாய் மெரினா பகுதியில் உள்ள கட்டிடங்கள் காலி செய்யப்பட்டு, ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். மனாமாவில் உள்ள முக்கியமான அலுவலகங்களில் உள்ள ஊழியர்களும் உடனடியாக வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி : தமிழ் இஸ்லாம் மீடியா

6 comments:

  1. துபாயில் இருக்கும் நாங்கள் கேள்விப்படுமுன் அதிரை நியூஸ் சிற்கு செய்தி கிடைத்து விடுவது ஆச்சரியமாக உள்ளது.

    செய்தி படித்த பிறகு தான் இங்கு உணரப்பட்ட நிலநடுக்கம் உண்மையென தெரிந்து கொண்டோம்.

    அதிரை நியூஸ்சிற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. அதிரை நியூஸ் செய்தி படித்த பிறகு தான் இங்கு நிலநடுக்கம் ஏற்ப்பட்டது என தெரிந்து கொண்டோம்.விரைவான பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete
  5. பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    நேற்று சரியாக மதியம் 2.55 மணியளவில் சவுதி தமாமிர்கும் அல்கோபர்க்கிடையேயுள்ள ராக்கா பகுதியிலும் நாங்கள் நில அதிர்வை உண்ர்ந்தோம்.

    ReplyDelete
  6. அதிரை நியூஸ் செய்தி படித்த பிறகு தான் இங்கு நிலநடுக்கம் ஏற்ப்பட்டது என தெரிந்து கொண்டோம்.விரைவான பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.