நிகழ்ச்சியின் நிரல் :
1. கிராத் : வணிக ஆட்சியல் துறை பேராசிரியர் A. முஹம்மது சித்திக் அவர்கள்.
2. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் A.M. உதுமான் முகைதீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
3. கல்லூரியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை ஆண்டரிக்கையாக தொகுத்து வழங்கினார் கல்லூரி முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்கள்.
4. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட MKN ட்ரஸ்டின் தற்காலிக நிர்வாகி நீதியரசர் K. சம்பத் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்.
5. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் V. மாணிக்க வாசகம் அவர்களால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டு, தேர்வில் பல்கலைக்கழக அளவில் சாதனை படைத்த மாணவ மாணவியருக்கும், மற்றும் பேச்சு, பொது அறிவு, கட்டுரை ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.
6. வணிகவியல் துறை தலைவர் முனைவர் M. சீனி முஹம்மது, வேதியியல் துறைத் தலைவர் முனைவர் T. இதயதுல்லாக்கான், வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் G. பாலசுப்பிரமணியன் ஆகியோரின் பணி நிறைவு அடைந்ததைத் தொடர்ந்து அவர்களுடைய பணிகளை நினைவுகூர்ந்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.
7. நிகழ்ச்சியின் இறுதியில் கணினித்துறைத் தலைவர் முனைவர் N. செயவீரன் அவர்களால் நன்றியுரை வாசிக்கப்பட்டது.
8. நிகழ்ச்சிகள் அனைத்தையும் மேஜர் முனைவர் கணபதி அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள், காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பதிவு க்கு. நன்றி
ReplyDeleteசெய்தி அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDeletevery good news.thanks
ReplyDeletevery good news.thanks
ReplyDelete