.

Pages

Saturday, April 27, 2013

இலண்டன் தமிழ் வானொலியில் அதிரை மெய்சா அவர்களின் சிறப்புக் கவிதை ஒளிபரப்பு [ காணொளி ] !

இலண்டன் வானொலியில் ஒளிபரப்பாகும் கவிதை நேரம் நிகழ்ச்சிக்கு கவிதை எழுத ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை தோறும் வித்தியாசமாக விருப்புத்தலைப்பிலும், நிறுவனத்தினரால் இடும்  தலைப்பிலும் கவிதை ஆர்வமுள்ளோர்கள் கவிதை பதியலாம். விருப்பமுள்ளோர் அனுப்பி வைக்கப்படும் தகுதியான கவிதையை இலண்டன் வானொலியின் இணையதளத்தில் ஒளிபரப்பு செய்வார்கள்.  அந்த வகையில் கடந்த வாரம் அன்று ''அடுத்தவர் எதிர்பார்ப்பு'' என்ற தலைப்புக்கொடுத்து  கவிதை  எழுதச்சொல்லி குறுகிய கால இடைவெளியில் கேட்டிருக்க  அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது அதிரை.மெய்சா அவர்கள் உடன் எழுதி  அந்நிறுவனத்திருக்கு அனுப்பி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு தரும் கவிதையை அங்கீகரித்து இலண்டன் தமிழ் வானொலியில் கடந்த [ 25-04-2013 ] வியாழன் அன்று ஒளிப்பரப்பு செய்தது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.

கடந்த  [ 11-04-2013 ] அன்று இவரின்  'ஏங்கி நின்றான்' என்ற தலைப்பிட்ட விழிப்புணர்வுக் கவிதையை ஒளிபரப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தவர் எதிர்பார்ப்பு :

மண்ணுலகின் மாயவாழ்வில்
மடிதனில் நீ தவழும்போதே
விண்ணுயர வளர்ந்திட்டு
வீறுகொண்டு நின்றிடவே
உள்மனதில் உன்மீது
உறக்கமில்லா கனவுகளில்
கறக்கத்துடன் காத்திருக்கும்
தாயவளின் எதிர்பார்ப்பு

பஞ்சம் பசி போக்க்கிடத்தான்
பாரினிலே வாழ்ந்திடத்தான்
நெஞ்சம் உருகி கேட்டிடும்
நிர்க்கதியான மனிதர்கள்
தஞ்சம் என்று தரணியிலே
தவமாய் கிடந்தும் பாராமல்
கொஞ்சம் ஈரம் படைத்தவர்கள்
கொடுத்துதவும் கரங்களாய்
தர்மம் ஒரு எதிர்பார்ப்பு

கண்ணுக்கு இமையாக
கருமேகத்து மழையாக
மின்னிவரும் ஒளியாக
மிளிர்ந்திருக்கும் உடையாக
கொடியிடையில் நடையாக
கோடிப்பூக்கள் உடலாக
சொல்லில் அடங்கா வரியாக
சுகமான நினைவாக
காதல் ஒரு எதிர்பார்ப்பு

ஆசானின் ஆசைகளோ
அன்பான மாணாக்கள்
அகம் மகிழ தேர்வாகி
அவன் வாழ்வு சிறந்திட்டு
அகிலத்தில் திழைத்திட்டு
அன்புடனே ஆதரிக்கும்
அடியேனை மறவாது
அனுதினமும் நினைவுகூற
அன்னவரின் எதிர்பார்ப்பு

வாக்குகள்பெற வாக்குறுதிபல
வழங்கிட்ட தலைவர்கள்
நாக்குறுதி இல்லாமல்
நழுவிச்செல்லும் செயல் கண்டு
நாட்டுமக்கள் நலம் பயக்க
நல்லவர்கள் ஆட்சி செய்ய
நா வறண்டு நடுப்பகலில்
நடத்திட்ட போராட்டம்
மக்களின் ஒரு எதிர்பார்ப்பு

எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாந்த நிலைகண்டு
துகில்பாடி வளம் வந்து
தொடரான அவலம் கண்டு
மதியதனை மனம் வென்று
மகிழ்வதனை பகிர்ந்திட்டு
சிறப்புடனே சீராட்டி
செழிப்புடனே வாழ்ந்திருக்க
அனைத்து ஆன்மாக்களின் எதிர்பாப்பு

8 comments:

  1. கவிஞருக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    மிகக் குறுகிய காலத்தில் எழுதினாலும் இந்தக் கவிதையில் எந்த விளக்கமும் குறுகி காணப் படவில்லை என்பதுதான் உண்மை. உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. மீண்டும் நமது தமிழ் மக்கள் காதில் புயல் அடித்த அதிரை மெய்ஷா காக்காவின் கவிதைவரிகள் அருமை.

    இன்னும் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் அதிரை மெய் சா அவர்களே

    விண்ணுயர வாழ்த்துகள்

    ReplyDelete
  5. வாழ்த்துகள்! மேன்மேலும் வளர எதிர்பார்ப்பு!

    ReplyDelete
  6. மெய்ஷா காக்காவின் கவிதைவரிகள் அருமை, மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    Reply

    ReplyDelete
  7. சிந்திக்கவைக்கும் தமிழ் கவிதைவரிகள் அருமை தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. கருத்துக்கள் பதிந்தும் இவ்வலைதளத்தில் வந்து வட்டமிட்டு என் கவிதைக்கு உரமிட்ட அனைத்து அன்பர்கள் சகோதரர்களுக்கும் என் அன்புகலந்த நன்றியினை தெரியப்படுத்திக்கொள்வதுடன் மூத்த கவிஞர் கவியன்பன் கலாம் அவர்களின் வாழ்த்தினையும் மனமுவந்து ஏற்று அவர்களுக்கு என் நன்றியையும் வாழ்த்தினையும் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.