அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் எதிரே அமைந்துள்ள உயர் மின் அழுத்தக் கம்பி அறுந்து கீழே விழும் அபாயத்தால் ஆதம் நகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கல்லூரி மாணவ மாணவியர் அதிகளவில் புழங்கக்கூடிய இடம் மட்டுமல்லாமல் வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள இடமாகவும் அமைந்துள்ளது.
அதிரை நியூஸ் சார்பாக 'மனித உரிமை ஆர்வலர்' KMA. ஜமால் முஹம்மது அவர்கள் அதிரை மின்சார வாரிய அலுவலத்தின் கவனத்திற்கு எடுத்துச்சென்றுள்ளார். கோரிக்கையை கேட்டறிந்ததோடு மட்டுமல்லாமல் உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
முஹம்மது முகைதீன் [ DIGI TECH ]
உடன் பார்வைக்கு கொண்டுவந்த தம்பி ஹாஜா முகைதீனுகும், உடன் நடவடிக்கை எடுக்க உதவிய மனித உரிமை ஆர்வலர் ஜமால் காக்கா அவர்களுக்கும் மிக்க நன்றி !
ReplyDeleteபொதுமக்களை பெரும் இழப்பிலிருந்து பாதுகாப்பது அவசியம் - துரித நடவடிக்கை தேவை.
அறுந்து விழும் நிலையில் உள்ள இந்த மின்கம்பியை விரைவில் மாற்றியமைக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைக்காவலர் ஜமால் காக்கா அவர்கள் முயற்ச்சிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteபெரிய இழப்பிலிருந்து பாதுகாப்பது அவசியம் அதற்க்கு முன் தகுந்த நடவடிக்கை எடுக்கவும்.இந்த புகைப்படத்தை எடுத்த முஹம்மது முகைதீன் [ DIGI TECH ] அவர்களுக்கு நன்றிகள் பல.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteநேற்றைய தினம் திரு பிரகாஷ் உதவி பொறியாளர் அவைகளிடம் இந்த செய்தியை எத்திவைக்கப்பட்டது. எந்த வித தாமதம் இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை