.

Pages

Tuesday, April 23, 2013

அதிரை 14 வது வார்டு பகுதிகளில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய பணிகள் மும்முரம் !

அதிரை 14 வது வார்டுக்கு உட்பட்ட நடுத்தெரு மேல்புறம், காலியார் தெரு, வெற்றிலைக்காரத்தெரு ஆகிய பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் பற்றாக்குறையுடன் காணப்பட்டு வந்தது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் மிகவும் பாதிப்படைந்து வந்தனர்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை இந்த பகுதியின் வார்டு உறுப்பினர் முஹம்மது ஷரிப் அவர்கள் மூலம்  அதிரை பேரூராட்சியின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து விலாரிக்காடு பகுதியிலிருந்து நேரடியாக குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளத்தில் பைப் லைன் போடப்பட்டு வருகின்றன. இதற்காக ரூபாய் 4 இலட்சம் செலவில் செயல்படுத்தப்பட உள்ள இந்த பணிகள் கடந்த இரண்டு நாட்களாக மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

விரைவில் அனைத்துப் பணிகளும் முடிவுற்று தங்கு தடையின்றி சீராக குடி நீர் வழங்க வேண்டும் என்பதே இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

6 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அதிரை யின் அன்ன ஹசரவா நீங்கள் இப்படியும் ஒரு ஆள் இருந்தால் தான் தவறை திருத்தி கொள்ள முடியும்.......

    ReplyDelete
  5. நல்லது நடந்தால் சரிதான்.

    ReplyDelete
  6. எனது நண்பன் முஹம்மது ஷரிப் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளர்க உன் பணி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.