தஞ்சை மாவட்டம் பேராவூரணி, பெருமகளூர், அதிரை பேரூராட்சிகள், பட்டுக்கோட்டை சேதுபாவா சத்திரம், பேராவூரணி, மதுக்கூர், பாபநாசம், திருவையாறு ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 1,153 குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க கடந்த [ 09-04-2012 ] அன்று நடந்த சட்டசபைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக 2012 & 2013 ஆம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியிட்டு இதை செயல்படுத்துவதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன.
இந்தப் பணிகளுக்காக திருச்சியிலிருந்து வருகை தந்த குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் இன்று மாலை அதிரையில் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இறுதியாக மேலத்தெரு நீர்தேக்க தொட்டியின் அருகே உள்ள இடம் மேட்டுப்பகுதியாகவும், போதுமான பரந்த இடத்தையும் கொண்டுள்ளதால் ஆய்வை மேற்கொண்ட அலுவலகர்கள் தேர்வு செய்துள்ளனர். மேலும் இந்த பணிகள் முழுவதும் வருகின்ற இரண்டு ஆண்டுக்குள் நிறைவு பெரும் என்ற தகவலையும் தெரியப்படுத்தினர்.
ஆய்வை மேற்கொண்ட அலுவலர்களுடன் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், துணைத்தலைவர் பிச்சை, வார்டு கவுன்சிலர் முஹம்மது யூசுப், லத்திப், சாகுல் ஹமீத், ஆகியோரோடு மணிச்சுடர் நிருபர் சாகுல் ஹமீது ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தினால் 24 மணி நேரமும் குடிநீர் வசதியை அதிரை பொதுமக்கள் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர் ஆகியோரோடு ஒரு நேர்காணல்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
ஆனால் சி.எம்.பி. லைனுக்கு தண்ணீர் வராது.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
பயனுள்ள ஆய்வு.
ReplyDeleteஅறியத்தந்தமைக்கு நன்றி.
என்ன அதிரை நியூஸ் தலைவரை மட்டும் பேட்டி எடுத்திங்க பெரும் தலைவரை ஏன் எடுக்கவில்லை
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.