இக்கூட்டத்தில் தக்வாப் பள்ளியின் பராமரிப்பு பணிகள் தொடர்பாகவும், பள்ளியில் மார்க்கப் பயான் நடத்துவதற்கு 'உலமாக்கள் சபை' மூலம் ஒப்புதல் கடிதம் பெற்ற பிறகு அனுமதி வழங்குவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து நேற்று [ 23-04-2013 ] இரவு மஹ்ரிப் தொழுகைக்குப் பின் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் அனுமதியின்றி பள்ளியில் மார்க்க பிரச்சாரம் நடத்தியதாகவும், நிர்வாகத்தினரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறி செயல்பட்டதனால் காவல்துறையில் புகார் செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து மேலும் விவரங்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரை சந்தித்து அவர்களின் விளக்கங்களைப் பெற்று தளத்தில் பதிய முயற்சிக்கப்படும்.
தகவலுக்கு நன்றி.
ReplyDeleteஅதிரை தக்வாபள்ளி நிர்வாகம் ஹைதர் அலி ஆலிமின் அவர்களின் பயானை வேண்டாம் என்று நிறுத்திவிட்டார்கள் நிர்வாகம் எடுத்த முடிவிக்குமாற்றமாக மீறி இளஞர் கூட்டத்தை அழைத்துக்கொண்டு பள்ளியில் போய் பயான் செய்ததினால் நிர்வாகம் போலீசில் கம்ப்ளைன்ட் செய்துள்ளது ஒரு ஆலிம் நிர்வாகத்திற்கு மாற்றமாக ஊரில் மீண்டும் குழப்பதை செய்வது நமக்கு ஒரு தலைகுனிவு
ReplyDeleteஹைதர் அலி மெளலான உலமா சபையில் அனுமதிவாங்கிவிட்டு பயான் செய்வாரா
ReplyDeletenirwagam yapdi waynalum solla lam anal.allahu oda kattalaiyum nabi sallalahu alaiwasallam awargalin walimuraigalaiyum solwatharkku yantha thadai yum illai
ReplyDeleteபொறுப்பில்லாத தலைமையும் அத்து மீறும் ஆலிமும் அதிரைக்கு அவமானம் இன்னொரு pj உருவாகிறாரா
ReplyDeleteஇவரின் பயானை நிறுத்துவது அவமானம் என்று கருதுகிறாரா இளைஞ்சர் கூட்டத்தை கூட்டி குழப்பம் விளைவிக்கின்றாரா
appa neega olugga bayan solluga ....
DeletePJ வை இங்கு இழுப்பது ஏன் என்று தெரியவில்லை .பிஜே வை தனிப்பட்ட முறையில் அவமான படுத்தியதால் தான் மார்க்க பிரச்சாரம் செய்ய வந்தார் என்று சொல்ல வருகிறீர்களா ?
Deleteஇந்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்
திருப்புர் தலைவா
Deleteபிஜேவை இங்கு சம்பந்தம் இல்லாமல் இழுப்பது எதனால்?
ஹைதர் அலிக்கும் பிஜேவுக்கு என்ன உடன்பாடு? உங்களுக்கும் அதிரைக்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் அதிரையில் வசிப்பவரா?
உங்களின் பதிலை வைத்து வலுவான பதில் வரும்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteதக்வா பள்ளி நிர்வாகத்தினர் ஹைதர் அலி ஆலிம் அவர்களை பத்து தினங்களுக்கு முன்பு அழைத்து நீங்கள் சில தினங்களுக்கு பயானை நிறுத்துங்கள் என்று வாய் மொழியால் கேட்டுக்கொண்டார்கள், ஆனால் அதற்கு அவர் எழுத்து மூலமாக தந்தால் நான் நிறுத்திக்கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார், ஆனால் அவர்கள் குறைந்தபட்சம் பத்து தினங்களுக்காவது நிறுத்துங்கள் என்று வாய் மொழியால் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள், அதற்கு ஹைதர் அலி ஆலிம் அவர்கள் கட்டுப்பட்டு பத்து தினங்களாக பயான் செய்யவில்லை. பத்து தினங்கள் கழிந்த பிறகு ஹஜ்ரத் அவர்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் செய்யாமல் நிர்வாக கமிட்டியில் உள்ள ஐந்திற்கும் குறைவான உறுப்பினர்களின் ஒப்புதலோடு அவர்களே ஒரு தீர்மானத்தை எடுத்துவிட்டு ஹஜ்ரத் அவர்களுக்கு எழுத்து மூலமாக அறிவிப்பும் செய்யாமல் ஹஜ்ரத் அவர்கள் வழக்கம்போல் பயான் செய்ய பள்ளிக்கு வந்த பிறகுத்தான் அவர்களுக்கே தெரியும் அதாவது அவர்களுக்கு பயான் செய்வதற்கு தடையென்று.
ஒரு ஆலிமை இப்படி தரக்குறைவாக நடத்துவது சரியா? அதுவும் மற்ற நிர்வாக உறுப்பினர்களின் கருத்துப்படி எந்த ஒரு தீர்மானம் நிறைவேற்றுவதாக இருந்தாலும் குறைந்த பட்சம் ஐந்து உறுப்பினர்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது வக்ஃப் வாரியத்தின் நெறிமுறை.
அப்படியிருக்க, காவல் துறைக்கு முன்னரே தயார் செய்து வைத்திருந்த புகார் மனுவை காவல் துறையிடம் அளித்ததால் ஹஜ்ரத் அவர்கள் பயான் முடித்து வீடு போய் சேருவதற்குள் காவல் துறை அதிகாரிகள் அவர்களின் இல்ல வாசலில் விசாரனைக்கு அழைத்துச்செல்வதற்காக காத்திருந்தனர்.
இவ்வளவு காரியத்திற்கும் காரணம் தான் என்ன? ஹைதர் அலி ஆலிம் மார்க்கத்திற்கு புறம்பாக ஏதும் பேசுகிறாரா?
சமூக சீர்கேடுகளை களையெடுப்பதற்காக வாரத்தில் எழு நாட்களும் அயராது சொற்பொழிவாற்றிக்கொண்டிருக்கும் ஒரு ஆலிமை இப்படி கீழ்தரமாக அவர் மேல் காழ்ப்புணர்வுள்ள சிலரின் தூண்டுதலால் தொடர்ந்து காவல் துறை நீதிமன்றம் என்று அலைகழிக்கவிட்டு அவரை நல்லமல்கள் செய்யவிடாமல் தடுப்பது அல்லாஹ்விற்கு பிடித்தமான செயலா? அல்லாஹ்வின் இல்லத்திற்கு நிர்வாகிகளாக இருப்பவர்கள் அல்லாஹ்விற்கு ஒவ்வொரு நிமிடமும் அஞ்சி ஒவ்வொரு செயல் செய்யும்போதும் காழ்புணர்வுகளை மறந்து நீதியை நிலைநாட்ட வேண்டும். அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிவிடாமல் அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாப்பானாக!
---
தௌஃபீக்.
yar antha silar sollugal lay nandraga irukkum
Deleteஅஸ்ஸலாமு அழைக்கும்,
ReplyDeleteஒரு ஆலிம் இவ்வளவு பிடிவாதம் கூடாது.இதற்கு முன் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் தற்காலிகமாக பயான் செய்ய தடை செய்த பொழுது அப்போது இருந்த நிறுவகம் ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு பயான் செய்ய அனுமதி அளித்தனர்.இப்போது உள்ள நிறுவகம் பயானை நிறுத்த சொன்னால் நிறுவாகத்திற்கு கட்டுபடாமல் மீறி பயான் செய்கிறார்.ஆலிம் அவர்கள் ஏன் இரண்டுவிதமாக செயல்படுகிறார் .ஹைதர் அலி ஆலிம் அவர்கள் முதன் முதலில் பயான் செய்ய அழைத்தபொழுது நிருவாகத்தினர் எழுத்து மூலம் ஆலிம் அவர்களை அழைக்கபட்டரா ?
yartharkku samsul islam sangam bayanai thadai saithadhu .....awargalin markathukku purambana sayal padukalai hydar ali alim sutti kattiyadhanala thaan awargal thadai saithargal
Deleteஆலிம்கள் என்றால் பயான்சொல்வது மட்டும் அல்ல.
ReplyDeleteஅதன்படிஅவர்கள் வாழ்வில் நடக்கவேண்டும், வாழ்ந்து காட்டவேண்டும்.
ஹைதர் அலி ஆலிம் அவர்கள்
நிர்வாகம் வேண்டாம் என்றால் அதை மீறவேண்டும் என்று நமக்கு வழிகாட்டுகிறர்களா!
அப்படியானால் நாம் கொண்ட முடிவை யாரும் தடுத்தால் அதை நாம் மீறவேண்டுமா?
இப்படித்தான் நாயகம்(ஸல்) போதனைகள் உள்ளனவா?
இதுகால் யாரையும் பயானுக்கு அழைத்தால் பயான் செய்வார்கள். வேண்டாம் என்றால் கண்ணியமாக போய்விடுவார்கள்.
ஊரில் பல பிரச்சனைகள் தோன்ற காரணமாக ஆலிம் என்பவர்கள் இருக்கமாட்டார்கள் என்றுதான் நாம் அறிந்து இருக்கின்றோம்.
ஊருக்குத்தான் பயான் தனக்கு இல்லை என்று விழையாட்டாக பல ஊர்களில் பேசுவதை இன்று கண்கூடாக காணும் பாக்கியம் அதிரைக்கு கிடைத்திருக்கு.
இது நல்ல வழிகாட்டல்! நாம் அதன்படி நடக்கவேண்டும்! ஏனென்றால் நாம் எப்படி ஆலிம் அவர்களுக்கு அறிவுரை கூறமுடியும்?!
தன் நாவாலும் கையாலும் அடுத்தவர் அமைதி, தன் அமைதி கெடாமல் வாழ்பவர் தான் முஸ்லிம் என்றுதானே ஜாவியாவில் பயான் சொன்னார்கள். இது ஆலிம் அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கா?
சரி என்றாவது ஜாவியாவில் இவர்கள் பயான் செய்தார்களா?
அங்கு ஏன் இவர்களுக்கு அனுமதி இல்லை?
மதர்சாவிலும்கூட இவர்களுக்கு ஏன் அனுமதி இல்லை? அதனால்தான் தக்வாப்பள்ளியில் அனுமதி இல்லையோ!
இனி அங்கும் சில இளைஞர்களை அழைத்துக்கொண்டு போய் பயான் செய்யும் காலம் வெகுதொலைவில் இருக்காது என்று நம்பலாம்.
ஆயிஷா மகளிர் மன்றம் இவர்களின் பயானை நிறுத்தினதும் ஏன் அங்கு மல்லுக்கட்டவில்லை?
அதிரை மக்கள் வந்தாரை எப்படியும் வாழவைப்பார்கள் என்ற உண்மையை இவர்கள் நன்கு தெரிந்துவைதுள்ளர்கள்.
ஊரில் அமைதி இன்மை நிலைக்க வாழ்க ஆலிம் குழப்பம்!!!
Yaar antha nirvaagam? Hyder ali aalim bayaanai nirutha solkira antha nirvagam moulidhai niruthuma? Nirvagam yedutha andha theermaaname sellaathu.
DeleteAppuram jaaviya madhurasa yenrellaam koorukireerkal, angellaam yaarudaiya adhikaaram yenru ungalukku theriyum, oru keralathil irunthu vanthavarin athikaarathil ulla oru bid'at vaadhiyin kattuppaattil pin yeppadi ivarai ponra aalimkalal yeppad inru varai mudium? Inru varai jaaviyavil yen abdul latheef aalimsha avarkal kalanthu kolvathu illai? Sathiyathai solvatharku sikkal varathaan seyyum.
ஹைதர் அலி ஆலிம் அவர்களின்
ReplyDeleteசொற்பொழிவு மிக நன்றாக இருக்கும் .அவரின்
வசீகர பேச்சு இளைஞர்களை நன்றாக செயல் பட
வைக்கிறது ...இணைய தளத்திலும் அவருக்கு
மவுசு கூடி உள்ளதை .பின்னூட்டம் மூலம் அறிய
முடிகிறது ..யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் எனக்கு இளைஞர் படை உள்ளது என்பதை சொல்லாமல் செயலால் காட்டுவது போல் தெரிகிறது ..எல்லாவற்றிற்கும் எல்லை உண்டு யார் அதை தாண்டினாலும் தவறுதான்