முத்துப்பேட்டையை சேர்ந்தவர் வேலூர் எம்.பி அப்துல் ரஹ்மான், இவரது சகோதரர் ராஜ் முஹம்மது, இவரது மகன் முஹம்மது நிஜாமுதீன் இவர் சென்னையில் வைர வியாபாரம் செய்து வருகிறார். வியாபார ரீதியாக இவர் மீது 15 லட்ச ரூபாய் மோசடி புகார் சென்னை சிட்டி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை சிட்டி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் தலைமையில் மூன்று போலீஸாரும் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், சப்-இன்ஸ்பெக்டர் உமாசங்கரி ஆகியோர் கொண்ட போலீஸ் குழு வேலூர் எம்.பி அப்துல் ரஹ்மான் வீட்டிற்கு புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு எம்.பி. யின் தாயார் மற்றும் உறவு பெண்கள் மட்டும் இருந்தனர். போலீஸார் முன் அறிவிப்பு இல்லாமல் வீட்டுக்குள் புகுந்ததால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் எம்.பி அப்துல் ரஹ்மானுக்கு டெலிபோன் மூலம் தகவல் கொடுத்தனர். மறு முனையில் பேசிய எம்.பி. சோதனைக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமாரிடம் இது குறித்து விளக்கம் கேட்டார், பிறகு சில நிமிடத்தில் எம்.பி வீட்டிலிருந்து வெளியேறி சென்றனர்.
தகவல் அறிந்ததும் அவசரஅவசரமாக சென்னையிலிருந்து முத்துப்பேட்டைக்கு வந்த எம்.பி அப்துல் ரஹ்மான். பின்னர் சோதனையில் ஈடுபட்ட போலீஸார்களை அழைத்து எப்படி முன் அறிவிப்பு இல்லாமல் எனது வீட்டில் சோதனை போடலாம், சம்பந்தப்பட்ட எனது சகோதரர் வீட்டில் தானே சோதனை போட வேண்டும், இந்த அதிகாரத்தை யார் உங்களுக்கு கொடுத்தது, என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். பதில் அளிக்க முடியாமல் தவித்த போலீஸார் மன்னிப்பு கோரி வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
இது குறித்து, எம்.பி. அப்துல் ரஹ்மான் கூறியதாவது, எனது சகோதரர் மகன் மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள். இது குறித்து என்னிடம் கேட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட நபரை காவல் நிலையத்தில் ஒப்படைக்க முயற்சி செய்து இருப்பேன். எனது சகோதரர் வீட்டிற்கு பதில் எனது வீட்டில் முன்னறிப்பு இல்லாமல் எப்படி சோதனையில் ஈடுபடலாம், குற்றவாளியை தப்பிக்க வழி வகுப்பதற்காக இதன் மூலம் விளம்பரம் தேடி உள்ளது காவல் துறை. எனது வீட்டில் சோதனை போடுவது எந்த விதத்தில் நியாயம், இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது குறித்து, உயர் மட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து தக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார். முத்துப்பேட்டையில் இரவு நடந்த இந்த சோதனையால் பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவி உள்ளது.
இந்த தகவல் அறிந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் முகைதீன் அடுமை மற்றும் முத்துப்பேட்டை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அனைவரும் மிகப்பெரும் கண்டத்தினை காவல் துறைக்கு தெரிவித்து உள்ளனர்.
நன்றி : muthupet.org
எம்.பி. அப்துல் ரஹ்மான் அவர்கள் கூறியது நியாயமானதே.!
ReplyDeleteபெண்கள் மட்டும் இருக்கும் பட்சத்தில் எந்த அறிவிப்புமின்றி சோதனையிட வந்தது. கண்டனத்திற்கு உரியதே.!