.

Pages

Monday, April 15, 2013

தங்கம் விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன..?

சர்வதேச சந்தையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சைப்ரஸ் நாடு, தங்கத்தை விற்பனை செய்து வருவதால், உலக நாடுகளிலும், இந்தியாவிலும் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, சைப்ரஸ் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க அந்நாடு, 53 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய, தங்கத்தை சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய துவங்கி உள்ளது. இந்த தங்கத்தின் வருகையால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவு இந்தியாவிலும் எதிரொலித்துள்ளதால், நடப்பாண்டில் நேற்று வரை, தங்கத்தின் விலை கிராமுக்கு, 288 ரூபாயும், பவுனுக்கு, 2,304 ரூபாயும் சரிந்துள்ளது. இந்த சரிவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

கடந்த, 2012 டிசம்பர் கடைசி வாரத்தில், தங்கம் கிராம், 3,010 ரூபாய்க்கும், பவுன், 24, 080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், 2013 ஜனவரி மாதம் முதல், தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது. ஜனவரி கடைசி வாரத்தில் கிராமுக்கு, 56 ரூபாயும், பவுனுக்கு, 448 ரூபாய் வரையிலும் சரிவு ஏறபட்டு, கிராம் 2,864 ரூபாய்க்கும், பவுன், 22, 912 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.அதை அடுத்து ஃபிப்ரவரி மாதத்தில், கிராமுக்கு, 73 ரூபாய் வரையும், பவுனுக்கு, 584 ரூபாய் வரையில் சரிவை சந்தித்தது. மார்ச் மாதத்தில் கிராமுக்கு, 60 ரூபாய் வரையிலும், பவுனுக்கு, 480 ரூபாய் வரையில் சரிவு ஏற்பட்டது.கடந்த, 2009 முதல், 2012 வரை, தொடர்ந்து விலை உயர்வை சந்தித்து வந்த தங்கத்தின் விலை, 2013 துவங்கிய பின், மூன்று மாதங்களில் கிராமுக்கு, 189 ரூபாய் வரையிலும் பவுனுக்கு, 1,512 ரூபாய் வரை சரிவு ஏற்பட்டது.


thanks news from web dunia 

3 comments:

  1. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  2. எட்டா கனி எட்டுமோ
    அங்கம் மின்னும் தங்கம்
    உனக்கும் ஏற்பட்டதே
    பங்கம்
    மீண்டும் ஏழைகளின்
    கழுத்தினில் மின்னவேண்டும்
    என் தங்கம்

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    இன்னும் சரியும் என்று கேள்விப்பட்டேன்.
    எப்படியும் ஒரேநாளில் கடுமையாக சரிந்து ஒரு பவுன் இருபத்தி இரண்டு காரட் (எட்டு கிராம்) விலை வெறும் நூறு ரூபாய்க்கு வரணும்.

    செத்தாணுக.
    ஓஓஓஒஓஓஓ வோஓஓஓஒ ஊஊஊ
    அவ்வளவுதான் ஒரே சங்கு சத்தமாக கிடக்கும்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.