சந்திப்பு : ‘தலைமை ஆசிரியர்’ ஹாஜி. மஹபூப் அலி அவர்கள் [ காணொளி ]
சமூக மேம்பாட்டுக்கும், மாற்றத்துக்கும் வித்திடக்கூடியக் கல்வி சமூகத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன என்றால் மிகையல்ல. மாணவர்களுடைய அறிவுத்திறன் மற்றும் ஒழுக்கத்தை வளர்ப்பதோடு அவர்களின் எதிர்காலத்தையும் நிர்மாணிப்பதில் பெரும் பங்கு வகிப்பது அன்புக்குரிய ஆசிரியப் பெருமக்களே !
1.மாணவர்களின் இன்றைய நிலை
2.மேற்கல்வி பயில்வது தொடர்பாக வழிகாட்டல்
3.மாணவர்களின் நலனுக்காக பெற்றோர்கள் – பாதுகாவலர்கள் – ஆசிரிய
ஆசிரியைகள் - முன்னாள் மாணவர்கள் ஆகியோரிடமிருந்து எதிர்பார்க்கும் ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புகள்
ஆகிய கேள்விகளை முன்வைத்து சந்திப்பு தொடருக்காக அதிரை கா.மு. ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹாஜி. மஹபூப் அலி அவர்களை ஒரு அருமையான இடத்தில் வைத்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.
தலைமை ஆசிரியர் ஹாஜி. மஹபூப் அலி M.Sc., M.Ed., M.phil., அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு :
நமதூர் காதிர் முகைதின் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்று தான் படித்த பள்ளியிலேயே வேதியியல் துறை முதுகலை ஆசிரியராக பணியை ஆரம்பித்து இன்று தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கைநிறைய சம்பளத்துடன் வேறு சில பணிகள் கிடைத்தும் அவற்றை உதறித்தள்ளி விட்டு ஆசிரியப்பணியின் மீதுள்ள அக்கறையால் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இப்பள்ளியில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றார்.
பள்ளியின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் அறிவியல் பாட திட்டத்தில் மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதத்தை பலமுறை 100 சதவீத சாதனையாகப் பெற்றுத்தந்த ஆசிரியர்களில் இவரும் ஒருவர் என்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் அதிரையில் இயங்கி வருகின்ற நிதி உதவி அமைப்பான கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் தலைவராகவும் இருக்கிறார்.
பள்ளியின் வளர்ச்சி, மாணாக்கர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தேர்ச்சி விகிதம் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்த தயாராக இருப்பதும் இதற்காக பெற்றோர்கள் – பாதுகாவலர்கள் – ஆசிரிய ஆசிரியைகள் - முன்னாள் மாணவர்கள் ஆகியோரின் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்புகள் போன்றவற்றை எதிர்பார்ப்பதாக கூறுவது கல்வியின் மீது அவர் வைத்துள்ள பற்றுதலையே பறைசாற்றுகின்றன.
தொடர்புக்கு :
ஹாஜி. மஹபூப் அலி M.Sc., M.Ed., M.phil.
[ தலைமை ஆசிரியர் – காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ]
மின்னஞ்சல் முகவரி :mahaboobali1505@gmail.com சேக்கனா M. நிஜாம் இறைவன் நாடினால் ! சந்திப்புகள் தொடரும்... நன்றி : சமூக விழிப்புணர்வு பக்கங்கள்
நாடு முன்னேற மாணவர்களின் பங்கு நிறைய உள்ளது. ஆகவே மாணவர்களின் முன்னேற்றமும்,பொறுப்பும் ஆசிரியர்களிடத்தில் மட்டுமல்லாது பெற்றோர்கள் வழிநடத்திச் செல்வதிலும் உள்ளது. மாணவன்,ஆசிரியர்,பெற்றோகளுக்குள்ள இடைவெளி நீங்கி இணைந்து பொறுப்புடன் மேற்கொண்டால் வருங்கால இந்தியா வளம் பெற்று ஓங்கி தழைத்திடும்.
இந்த தளத்தின் மூலம் தம்பி மகபூப் அலிக்கு ஒரு கோரிக்கை விட விழைகிறேன்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னாள் காட்டுக் கருவைச் செடிகளின் தன்மைகளைப் பற்றிய ஒரு கட்டுரையைப் பதிந்து இருந்தேன். சுற்றுச் சூழல்களுக்கு மிகவும் ஆபத்தான இந்த செடிகளை நமது ஊரைவிட்டும் அகற்றும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்த ஒரு திட்டத்தை அறிவிக்குமாறு - அதற்கான ஒரு இயக்கத்தை நடை முறைப் படுத்துமாறு கோருகிறேன். மாணவர்களின் கல்விக்கு இடையூறு இல்லாமல் இதனை செய்ய வேண்டுகிறேன்.
காட்டுக் கருவிகள் அகற்றப் பட்ட இடத்தில் வேறு மரங்களை நட வேண்டுகிறேன். சுற்றுச் சூழல் வளர்ச்சி என்பதும் கல்வியின் வளர்ச்சி போலவே முக்கியமானது.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பயனுள்ள பதிவு
ReplyDeleteபதிந்து அறியத்தந்தமைக்கு நன்றி.
நாடு முன்னேற மாணவர்களின் பங்கு நிறைய உள்ளது. ஆகவே மாணவர்களின் முன்னேற்றமும்,பொறுப்பும் ஆசிரியர்களிடத்தில் மட்டுமல்லாது பெற்றோர்கள் வழிநடத்திச் செல்வதிலும் உள்ளது.
மாணவன்,ஆசிரியர்,பெற்றோகளுக்குள்ள இடைவெளி நீங்கி இணைந்து பொறுப்புடன் மேற்கொண்டால் வருங்கால இந்தியா வளம் பெற்று ஓங்கி தழைத்திடும்.
இது போன்ற காணொளி ..
ReplyDeleteஅதிரை நியூசில் தொடர வேண்டும் ..
வாழ்த்துக்கள்
இந்த தளத்தின் மூலம் தம்பி மகபூப் அலிக்கு ஒரு கோரிக்கை விட விழைகிறேன்.
ReplyDeleteகடந்த சில வாரங்களுக்கு முன்னாள் காட்டுக் கருவைச் செடிகளின் தன்மைகளைப் பற்றிய ஒரு கட்டுரையைப் பதிந்து இருந்தேன். சுற்றுச் சூழல்களுக்கு மிகவும் ஆபத்தான இந்த செடிகளை நமது ஊரைவிட்டும் அகற்றும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்த ஒரு திட்டத்தை அறிவிக்குமாறு - அதற்கான ஒரு இயக்கத்தை நடை முறைப் படுத்துமாறு கோருகிறேன். மாணவர்களின் கல்விக்கு இடையூறு இல்லாமல் இதனை செய்ய வேண்டுகிறேன்.
காட்டுக் கருவிகள் அகற்றப் பட்ட இடத்தில் வேறு மரங்களை நட வேண்டுகிறேன்.
சுற்றுச் சூழல் வளர்ச்சி என்பதும் கல்வியின் வளர்ச்சி போலவே முக்கியமானது.
https://tamilislammedia.com/most-people-are-looking-for/
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஆக்கம், முயற்சி, இயக்கம், வடிவு எல்லாம் ஓகே. இதுமாதிரி சந்திப்புகள் தொடர பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
பயனுள்ள பதிவு.
ReplyDeleteஇது போன்று ஆசிரியர்களின் மாணவர்கள் வளர்ச்சி பெற்றோர்களின் குழந்தையின் வளர்ச்சி போன்ற பதிவுகள் தொடரவேண்டும்.