.

Pages

Tuesday, April 16, 2013

கோடையின் தாக்கமும், பசலையின் நன்மையும்



கோடை மண்டையை மட்டும்மல்ல உடம்பையே பிளக்கும் இவ்வேளையில் நாம் நம் உடம்பை பாதுகாத்து கொள்வது நம் கடமையாக இருக்குது, கூடுதலாக தண்ணீர் அருந்துவது, பழங்கள் சாப்பிடுவது, காய்கறிகளை உண்ணுவது, அதோடு கீரை வகைகளையும் சேர்த்துக் கொள்வது. நம் உடம்புக்கு நன்மை அளிக்கும்.

பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ள எளிய உணவு வேறு இல்லை எனலாம் .

பசலைக் கீரை பொதுவாக மூன்று வகைப்படும். சிறு வெற்றிலை அளவில் வெந்நிறமுடையதாக இருக்கும் இலைகளுடன் கொடியாகப் படரும் பசலை கொடிப்பசலை எனப்படுகிறது. இதை வீட்டுத் தோட்டத்திலும் தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம்.

தரைப்பசலையின் இலைகள் மிகவும் சிறுத்து இளஞ்சிவப்பாகவும், பச்சையாகவும் இருக்கும். இது தரையில் படரும்.

இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம். ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. அதே சமயம் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் இரும்பு, கால்சியம் சேராமல் தடுக்கிறது. இதனால் இதய நோயாளிகள் இந்தக் கீரையை அளவுக்குமீறி சாப்பிடக் கூடாது.

இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த விருத்திக்கும் உதவுகிறது.

இந்த கீரையில் வைட்டமின் A, B C சத்துகள் உள்ளது . சுண்ணாம்பு சத்து, நார் சத்து, இரும்பு சத்து அடங்கியது . இது தாதுவை கெட்டிப்படுத்தும். மூளைக்கு சக்தி கொடுக்கும். உடல் வரட்ச்சியை அகற்றும். உள சூட்டை போக்கும். மருத்துவக் குணங்கள் இதில் மிக அதிகமாக உள்ளன . பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது.

ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது. இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த விருத்திக்கும் உதவுகிறது.

ஒரு கப் பசலைக்கீரையில் இருக்கும் உணவுச்சத்து: கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லிகிராம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம்.

இலையை நன்றாக அரைத்து கொப்புளம், கழலை, வீக்கம் ஆகியவற்றின் மீது பற்றிட்டால் அவை குணமாகும்.

இலையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சூட்டினால் உண்டான தலைவலி நீங்கும். பசலை கீரை ஏழைகளின் சத்துள்ள தாவர Tonic!

உடம்பை பாதுகாப்போம், கோடையை வெல்லுவோம்.

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன், அன்புடன்.
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o, K. Mohamed Aliyar (Late)

3 comments:

  1. இக்கோடைக்கு குளிர்ச்சியூட்டும் பசலைப்பதிவு அருமை.

    பசலை கீரையில் இவ்வளவு விஷயம் இருப்பது தாங்களின் பதிவை பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.

    நன்றி.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பதிவிற்கு நன்றி

    ReplyDelete
  3. அருமையான பதிவு ஒரு டாக்டர்யிடம் கிடைக்ககூடிய அறிஉறை நமது ஜமால் காக்காவிடம் கிடைத்து இருக்கின்றது வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.