.

Pages

Tuesday, April 2, 2013

SDPI - தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இலியாஸ் தாக்கப்பட்டதை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் !

நேற்று  [ 01-04-2013 ] இரவு கடலோர கிராமமான புதுப்பட்டினதில் உள்ள பள்ளிவாசல் அருகே இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்தப்பகுதியில் பாதுகாப்பு பணிகளில்  போலீசார் ஈடுபட்டு வந்தனர். அப்போது  மல்லிபட்டினத்தில் வசிக்கும் SDPI - யின் தஞ்சை தெற்கு மாவட்டச் பொதுச்செயலாளர் நூருல் இஸ்லாம் அவர்களை சந்திப்பதற்காக  அந்த வழியே சென்ற தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இலியாஸ் அவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த இலியாஸ் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்று [ 02-04-2013 ] மாலை  4.30 மணியளவில் SDPI - தஞ்சை தெற்கு பிரிவின் சார்பாக பட்டுகோட்டை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு சிறிது நேரத்துக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். அந்தப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈட்பட்டிருந்தனர்.

முன்னதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்ரென்டு அன்பு அவர்கள் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு இருந்த SDPI கட்சியினரின் கோரிக்கையை பெற்றுக்கொண்டு தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.








1 comment:

  1. புறப்படு தோழா புறப்படு. .துணிவோடு துணிந்து போராடு. .வீழ்வது நானாக இருந்தாலும், வாழ்வது என் இனமாக இருக்கட்டும்.
    முடங்கி கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறைபிடிக்கும்...
    எழுந்து எழுச்சியுடன் போராடினால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்...--------ஷஹித் பழனிபாபா

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.