.

Pages

Monday, April 8, 2013

அதிரை வாய்க்கால் தெருவில் தரமில்லா தார்சாலையால் பொதுமக்கள் ஆதங்கம் !

கடந்த சில நாட்களாகவே அதிரை பேரூராட்சியின் சார்பாக 13-வது வார்டுக்கு உட்பட்ட வாய்க்கால் தெருவின் முக்கிய பகுதிகளில் புதிய தார்சாலை  அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 




இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் ஆதங்கப்பட்டு கருத்து தெரிவித்தனர்

'எங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், போடப்பட்ட சாலையில் போதுமான தார் கலவையில் இல்லாத காரணத்தினால் வரும் மழைக்காலங்களில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சி அளிக்க இருப்பது உண்மை. ஒரு சில பகுதிகளில் தரமானதாக போடப்பட்ட அதே வேளையில் இந்த பகுதியில் பெயருக்கு போடப்பட்டுள்ளது. அதுவும் ஜல்லிகள் எல்லாம் மேலே பெயர்ந்து வருகின்றன என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இது குறித்து 13-வது வார்டு உறுப்பினர் அப்துல் காதர் மற்றும் காண்ட்ராக்டர் சுல்தான் ஆகியோரிடம் விளக்கம் பெற்ற வகையில்...

பணிகள் நடந்து வருவதாகவும் இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை என்றும் சம்பந்தப்பட்ட பகுதிகள் கவனத்தில் கொண்டு சரிசெய்யப்படும் என்ற பதிலைத் தந்தனர்.

7 comments:

  1. விரைந்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும்

    ReplyDelete
  2. நீண்ட நாள் கனவு காணும்போது மிக்க மகிழ்ச்சி ஆனாலும் தரமானதாக தரவேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்புகள்

    ReplyDelete
  3. இவ்வளவு முயற்ச்சிக்கு பிறகு செய்து கொடுக்கும் வேலைகளை ஒழுங்காக செய்து கொடுத்து விட்டால் பொது மக்களும் பயனடைவார்கள்.பேரூராட்சிக்கும் நல்ல பெயர் தானே ஏன் இதை யோசிக்க தவறுகிறார்கள்.

    ReplyDelete
  4. இவ்வளவு முயற்ச்சிக்கு பிறகு செய்து கொடுக்கும் வேலைகளை ஒழுங்காக செய்து கொடுத்து விட்டால் பொது மக்களும் பயனடைவார்கள்.பேரூராட்சிக்கும் நல்ல பெயர் தானே ஏன் இதை யோசிக்க தவறுகிறார்கள்.

    ReplyDelete
  5. plz obey d IRC rules b4 construction of road.

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.

    தார் சாலைகள்.
    இதுக்கு மண் சாலையே நல்லது.

    யாருடைய பணத்தில் சாலைகள் போடப்படுகிறது?
    விருந்து கொடுத்தால் முறையாக கொடுக்க வேண்டும்.
    இல்லையேல் வெறும் கஞ்சியே போதுமானது.

    மக்களுடைய எதிர்ப்பார்ர்ப்பு ஒருபுறம்.
    நிர்வாகிகளின் எதிர்ப்பார்ர்ப்பு மறுபுறம்.

    அது எப்படியோ, தரமான சாலைகளையே மக்கள் விரும்புவர்.

    As per the consumer and human rights, தரமானதை மக்களுக்கு கொடுப்பது நிர்வாகிகளின் பொறுப்பு.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  7. இனி மழைநீர் நிலத்தில் செல்லாமல் வாய்க்கால் வழியாக சென்று கடலுக்குள் சென்று விடும். விளைவு நிலத்தடி நீர்மட்டம் இன்னும் கீழே சென்று எதிர்காலத்தில் வறச்சி அதிகமாகி ஊர் பாலைவனமாக காரணம் நாமே ஆகிவிடுவோம். வீடுகளில் மழை நீரை சேமிக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள். அதனால் நீர் மட்டம் உயர்வதோடு, உப்பாக மாறுவ்திலிருந்தும் பாதுகாப்பு. எதிர்கால சந்ததியினருக்கு பயனுள்ளவைகளை விட்டுச் செல்வோம்,,,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.