.

Pages

Wednesday, April 10, 2013

தஞ்சையில் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு !

தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையமும், இந்திய தொழிலாளர் கூட்டமைப்பும் இணைந்து வருகிற 13–ந்தேதி [ சனிக்கிழமை ] காலை 10 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமிற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஏற்பாடு செய்து உள்ளது. முகாமில் தமிழகத்தின் 10–க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

எனவே எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள் எச்.எஸ்.சி, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டதாரிகள் மற்றும் ஓட்டுனர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். தேர்வு செய்யப்படும் மனுதாரர்களின் பதிவு விவரங்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ந்து பராமரிக்கப்படும். இவர்களின் தகுதிக்கு ஏற்ப அரசு பணி வாய்ப்புகளுக்கும் பரிந்துரை செய்யப்படும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பி.இ. மற்றும் உயர்கல்வி தகுதி கொண்ட பதிவுதாரர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.


நன்றி : தினத்தந்தி

2 comments:

  1. பயனுள்ள பதிவு.

    பகிர்ந்தமைக்கு நன்றி.

    இத்தகைய வாய்ப்பினை கைவிடாது அதற்க்கு தகுதியானவர்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ளலாம்.

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.