.

Pages

Sunday, April 14, 2013

கடற்கரைத்தெருவின் பிராதான சாலை சீரமைக்கப்படுமா !? பொதுமக்கள் எதிர்பார்ப்பு !

ஈசிஆர் சாலையிருந்து அதிரை கடற்கரைத்தெருவிற்கு செல்லும் பிரதான சாலை பேரூராட்சியின் 10 வது வார்டு [ ஹாஜா நகர் ] மற்றும் 8 வது வார்டு [ கடற்கரைத்தெரு ] ஆகியவற்றின் நிர்வாக பொறுப்பின் கீழ் வருகின்றன.

கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளி திறப்பின் போது போடப்பட்ட இந்த சாலை பராமரிபின்றி மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன. இதனால் வாகனத்தில் செல்வோரும், பள்ளி கல்லூரி செல்லும் மாணாக்கர்களும், முதியோர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாயி வருகின்றனர் என்று இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் ஆதங்கப்பட்டு கருத்துகளை தெரிவித்திருந்தனர்.





இதுகுறித்து 8 வது வார்டு கவுன்சிலர் சாகுல் ஹமீத் அவர்களை 'அதிரை நியூஸ்' சார்பாக தொடர்புகொண்டு விசாரித்த வகையில்...

பழுதடைந்துக் காணப்படும் இந்த சாலையை சீரமைத்தல் மற்றும் அச்சாலை யோரத்தில் வடிகால் வாய்க்கால் அமைத்தல் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டுள்ளன என்றும், இதில் 450 மீட்டர் தூரத்தில் வடிகால் வாய்க்கால் அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களின் ஆய்வுப்பணிகள் முடிந்துவிட்டன என்றும் விரைவில் மற்ற பணிகள் ஆரம்பமாகும் என்றும் கூறினார்.

மேலும் பழுதடைந்த சாலையை சீரமைப்பது தொடர்பாக வரும் மே மாதத்திற்குப் பின் இதற்குரிய பணிகள் ஆரம்பமாகும் என்று கூறினார்.

நன்றி : முஹம்மது முகைதீன் [ DIGI TECH ]

7 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. அதிரை ரயில் நிலையம் போக பிரதான சாலையாகவும், (ரயிலு வரும்...???) கடல்கரைதெருவின் முக்கியசாலையாகவும் திகழும் இந்த சாலையை சம்பத்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து சீர் அமைத்தால் நல்லது.

    ReplyDelete
  3. ரயிலடியை சார்ந்ததனால் இதையும் கண்டுக்காமலே விட்டுட்டாங்களோ?

    ReplyDelete
  4. அதிரை நியூஸ் ..,

    ஊடகத்தின் விழிப்புணர்வு

    ReplyDelete
  5. Yaru muthalil step edupathu chair manna or sub.charmanna kulappam

    ReplyDelete
  6. இன்னுமா அந்த சாலை சரிசெய்யமே இருக்கு எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து அப்படியே இருக்கு.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.