.

Pages

Tuesday, April 9, 2013

தேங்கிய சாக்கடை கழிவு நீரை அகற்றக்கோரி தரகர் தெரு பொதுமக்கள் சாலை மறியல் !

அதிரை தரகர் தெருவில் மாதக் கணக்கில் தேங்கிக் கிடக்கும் சாக்கடை நீரை அகற்றக்கோரி பலமுறை மனு அளித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லையாம். இதனால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தரகர் தெருவாசிகள் தங்கள் பகுதியில் தேங்கியுள்ள சாக்கடை நீரை உடனடியாக அகற்றி, சுத்தம் செய்து தருமாறு பேரூராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி நேற்று [ 08-04-2013 ] கிழக்குக் கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வணிகர் ராஜிக் அகமது, பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.

தகவலறிந்த அதிரை காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் பேச்சு நடத்தி, பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் ஒரு வாரத்தில் தேங்கிய சாக்கடை நீர் அகற்றித் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

4 comments:

  1. தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நமதூரில் அதிகபட்ச தெருக்களில் இந்த பிரச்சனை இருக்கிறது. அதற்க்கு பேரூராட்ச்சிதான் சுணங்காது நல்லதொரு தீர்வு காண வேண்டும். ஊரில் புதுப்புது நோய்கள் பரவக்காரணம் இந்த சாக்கடைநீரே..!

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. அதிரை தரகர் தெருவில் மாதக் கணக்கில் தேங்கிக் கிடக்கும் சாக்கடை நீரை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாலை மறியல் செய்தனர் வாழ்த்துக்கள். இது போல் தடைசெய்யப்பட்ட பிலாஸ்டிக் பைகளை நிறந்தரமாக புறக்கணித்தால் நமக்கு நாமே தூய்மையாக வைத்துக்கொள்ளலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.