.

Pages

Thursday, April 4, 2013

மதுக்கூரில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் !

மதுக்கூர் ஆற்றாங்கரை மெயின்ரோட்டில் [ பழைய சுப்பையன் கிளப் அருகில் ]  பெண்கள் குளிக்கும் கரை மிக அருகில் புதிய அரசு மதுபானக்கடை நேற்று திடீர் என திறக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அப்பகுதிமக்கள் எப்படியும் அரசு மதுபானக்கடையினை அகற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்ட அப்பகுதி மக்கள் இன்று காலை 10 மணியளவில் ஆற்றாங்கரை அருகில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் 100 பெண்கள் உட்பட பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், தமுமுக மதுக்கூர் நகர நிர்வாகிகள், எஸ்டிபிஐ நகர நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சியினர் என 200 க்கும் அதிகமனோர் கலந்து கொண்டனர்.

போராட்ட இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை ஆர்டிஓ ரகுமத்துல்லகான், மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் வருகை தந்து இரண்டு நாளில் கடை இடமாற்றம் செய்யப்படும் என வாக்குறுதி அளித்ததினை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

3 comments:

  1. அவசியமான போராட்டமே.!

    எதற்கும் போராட்டம் செய்தாலே நம் நாட்டில் தீர்வு கிடைக்கும்.

    ReplyDelete
  2. அவசியமான போராட்டமே.

    ReplyDelete
  3. மதுக்கூர் மதுக்கடை போர் ......SDPI
    03.4.13 மதுக்கூரில் பஸ் ஸ்டாண்ட் ஆத்து பலம் மக்கள் குடி இருப்பு அருகே புதிய மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது எனவே அதை அகற்றகோரி சாலைமறியல் நடைபெற்றது இதில் 200 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் இதில் பொதுமக்களுடன் இணைந்து SDPI கட்சியினரும் கலந்து கொண்டனர் இதில் SDPI கட்சி மாவடடசெயலாளர் செய்யது முஹம்மத் மற்றும் நகரத்தலைவர் ராஜமுஹம்மத் நகர செயலாளர் அசாருதீன் பொருளாளர் மதுகை முபாரக் மேற்கு கிளை தலைவர் அசாருதீன் கிளை து தலைவர் பாட்ச மைதீன் கிழக்கு கிளை செயலாளர் அல்யாசின் மற்றும் செயல் வீரர்கள் கலந்து கொண்டனர் போராட்டம் வெற்றி பாதையை எட்டியது

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.