நமதூரில் எவ்வாறெல்லாம் விருந்துகள் உபசரிக்கப்படுகின்றது ?
1. திருமண வலீமா விருந்து
2. வீடு குடிபுகுதல் விருந்து
3. விருந்தாளிகளுக்கு வைக்கப்படும் விருந்து
4. நண்பர்களுக்கு வைக்கப்படும் விருந்து
5. ஹஜ் செல்லும்போதும் / முடித்துவிட்டு வரும்போதும் வைக்கப்படுகின்ற விருந்து
6. பெருநாள் விருந்து
7. குழந்தை பிறப்பு
என இவ்வாறெல்லாம் விருந்துகள் உபசரிக்கப்படுகிறது.
லுஹர்த் தொழுகை முடித்தவுடன் வைபவங்கள் நடக்கும் வீட்டின் அருகிலே பந்தல் அமைக்கப்பட்டு அல்லது திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இம்மதிய விருந்துகள் உற்றார் - உறவினர்- நண்பர்கள் ஆகியோருக்கு உபசரிக்கப்படுகின்றன.
ஊரிலே கலரி விருந்து என்றொரு பெயரிலும் இவற்றை அழைப்பதுண்டு.
இஸ்லாத்தின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஏழை !?, பணக்காரான் !?, தெருக்கள் - குடும்ப பீலிங் !? என்றப் பாகுபாடுகள் இல்லாமல் தமிழகத்திலேயே சஹனில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடிய ஊர்களில் நமதூரும் ஒன்றாக இருக்கிறது.
அஞ்சு கறி என்ற பெயரில் விருப்பமாக அழைக்கப்படும் இந்த உணவை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இவை சீராகச் சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர் ரக அரிசியில் தயாரிக்கப்படுகிற கம கம மணத்துடன் நெய்ச் சோறு, செம்மறி ஆட்டுக்கறியில் கூடுதல் ஆயில் ( ! ) இட்டு தயாரிக்கப்படுகிற கறி ஆணம், நாவிற்கு சுவையைக்கூட்ட நாட்டுக் கத்தரிக்காயில் பச்சடி, உருளையில் குருமா, செரிமானத்திற்கு என்று சொல்லியே ( ! ? ) அனைவரும் விரும்பி பருகக்கூடிய புளியானம் ( ரசம் ) போன்றவை ஒரு வகையாகவும்...
மற்றொறு வகையாக பிரியாணி ! நமதூருக்கே பெருமை சேர்க்கக்கூடிய உணவாகவும் அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணக்கூடியதாகவும் உள்ளது. இவை சீராகச் சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர் ரக அரிசியில் சமமான அளவு செம்மறி ஆட்டுக்கறிச் சேர்த்து தயாரிக்கப்படுகிறப் பிரியாணி சுவையாகவும், நறுமண மிக்கதாகும் இருக்கும். மேலும் கூடுதலாக துண்டுகளிட்ட பொரிச்ச கோழி, வெங்காயத் தயிர் ஊறுகாய், எலுமிச்சை கலரி ஊறுகாய் போன்றவைகள் இவற்றில் இடம்பெற்றிருப்பது வயிறார உண்பதற்கு கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.
தால்ச்சா ! இதன் ருசியே தனி, அஞ்சு கறி, பிரியாணி போன்ற உணவிற்கு கூடுதல் இணைப்பாக அதில் இடம்பெற்றிருக்கும்.
இனிப்பு வகைகளாக...
1. சேமியாவில் தயாரிக்கப்படுகிற பிர்னி
2. பீட்ரூட்டில் தயாரிக்கப்படுகிற இனிப்பு
3. கோதுமையில் தயாரிக்கப்படுகிற இனிப்பு
4. ரவாவில் தயாரிக்கப்படுகிற கேசரி
5. பேரிட்சை பழத்தில் தயாரிக்கப்படுகிற இனிப்பு
போன்றவற்றில் ஏதாவது ஒன்று அஞ்சு கறி மற்றும் பிரியாணி உணவில் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் ஒவ்வொரு சஹனிலும் மூன்று தண்ணிர்ப் பாக்கெட்கள் அதில் வைக்கப்பட்டிருக்கும்.
அஞ்சு கறி, பிரியாணி போன்ற உணவுகள் திருமண நிகழ்ச்சிகள், வீடு குடி புகுதல், ஹஜ் செல்லும்போது / முடித்துவிட்டு வரும்போது போன்ற நிகழ்வுகளில் மதிய உணவாக ஒவ்வொரு சஹனிலும் தலா மூவர் வீதம் அமர்ந்து பரிமாறுவார்கள்.
மறு சோறு போதும்... போதும்... எனச்சொல்லும் அளவுக்கு அனைவருக்கும் வழங்கி தங்களின் சகோதரத்துவ அன்பைக் காட்டுவார்கள்.
வாங்க காக்கா !
பேப்பரு தாங்க...
மூணு பேரா உட்காருங்க...
அங்கே ஒரு சஹன் வைங்க !
எங்கே தால்ச்சா ?
இங்கே சோறு பத்தலே...
எங்கே மறுசோறு ?
இன்னொரு சுவீட் எடுத்துத் தாங்க !
என இதுபோன்ற பழக்கப்பட்ட சந்தோஷக் குரல்கள் கலரிச் சாப்பாட்டில் அங்காங்கே ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்...
என்ன சகோதரர்களே ! உங்களுக்கும் அப்படி ஒலித்ததா !?
கவனத்தில் கொள்ளவேண்டியவை :
வைபவங்கள் நடக்கும் வீட்டில் நடைபெறும் விருந்து உபசரிப்புகளில் வீணாக உணவு விரையமாக்கப்படுவது மிகவும் சிந்திக்க + வேதனைப்பட வேண்டிய ஒன்றாகும். உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்மிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண் விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாகும். உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் பிள்ளைகளின் மனதில் போட்டு விதைப்போம். நாளை அது செழித்து வளர்ந்து சமூக அக்கரை உள்ள குடிமக்களை உருவாக்கும். ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பதுதான் சிறந்தது என்பதை அனைவரும் உணருவோம்.
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...
ஊர் விருந்து சாப்பிட்டு ரொம்பநாளாச்சு. பிரியாணி சஹனை பதிவில் புகைப்படமாய் போட்டு நாக்கில் எச்சில் ஊறவைத்ததுடன்
ReplyDeleteபதிவில் உள்ள கடைசிவரிகளில் உணவை வீண் விரயம் செய்யவேண்டாமென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி பதிவின் நோக்கத்தை சொல்லியிருக்கும் விதம் அருமை.
தொடர வாழ்த்துக்கள்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteவாங்க எல்லோரும் வாங்க, உள்ளே போங்க, இப்படி உட்காருங்க.
தம்பி அதன் பேப்பரை எடுத்துட்டு இங்குட்டு வாப்பா.
அட, விழிப்புணர்வு குழுவுங்களா, எல்லோரும் இப்படி வாங்க ஒரே இடத்தில் அமருங்க. விழிப்புணர்வு குழுக்கள் பல எல்லைகளை கடந்து இருந்தாலும் இணையத்திலும் ஆக்கத்திலும் கருத்திலும் ஒன்றாக இணைந்து இருப்பார்கள், இன்று எங்கள் வீட்டு விருந்தில் அனைவரும் ஒன்றாக வந்து இணைந்து இருப்பது எவ்வளவு அழகாக இருக்குது தெரியுமா?.
தம்பி பேப்பரை அப்படியே கொடுத்துக்குட்டு வா,
புஹாரியாகா சாப்பாட்டை தூக்கிவிடுங்க.
இந்த தம்பி அதை அங்குட்டு கொண்டுபோ,
இந்தாப்பா நீ இந்தப்பக்கம் போ,
ஹலோ, இதே இங்க பாருங்க, மறு சோறு எடுங்க,
அந்த பொம்பளையே கூப்பிடுப்பா, இந்தாமா கீழே சிந்தாமே சுத்தம் பண்ணும்மா.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
நல்ல படைப்பு சுன்னத் விருந்து, எடுப்பு சாப்பாடு,வயதுக்கு வந்தா விருந்து ஹத்த சாப்பாடு 3,7,21,,40,நாள் கணக்கு சாப்பாடு இப்படி நிறைய உண்டு
ReplyDeleteவிருந்து உபசரிப்புகளில் வீணாக உணவு விரையமாக்கப்படுவது மிகவும் சிந்திக்க + வேதனைப்பட வேண்டிய ஒன்றாகும். உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்மிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண் விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாகும்.
ReplyDeleteநானும் கல்யாண சாப்பாடு சாப்புட்டு ரொம்பநாளாச்சு. இன்ஷா அல்லாஹு ஊருக்கு வந்துதான் இதுப்போன்ற விருந்துகளில் கலந்துக்கொள்ள ஆசை பிரியாணி ஐந்து கறி சாப்பாடு இதல்லாம் ரொம்ப பிடிக்கும். நல்ல பதிவு மீண்டும் நாபகம் செய்ததற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎப்பா நிசாமு ஊருக்கு டிக்கெட் போட வெச்சிடுவே போலருக்கே... missing lots...
ReplyDeleteபந்தி பரத்துவதற்கென்றே நம்மக்கள் ஆர்வமா ஈக்கிறதும்
சகன் கைமாறும்போதே ”தாளிச்சாவிலுள்ளசிலதுகள்” காணாமல் போவதும்
அடுத்த சகனில் இருக்கும் கரியையோ, ஸ்வீட்டையோ ஜாலியா ஆட்டைய போடுவதையும் சொல்லாம விட்டுட்டியேப்பா...
// எப்பா நிசாமு ஊருக்கு டிக்கெட் போட வெச்சிடுவே போலருக்கே... missing lots...//
Deleteசீக்கிரம் வந்துரப்பா :)
//ஹத்த சாப்பாடு 3,7,21,,40,நாள் கணக்கு சாப்பாடு// இதுக்கெல்லாம் கொடுக்கும் விருந்து குறைந்துவிட்டது என்றே நினைக்கிறேன் அல்லது விருந்து வைத்தாலும் பெரும்பாலோனர் கலந்துக்கொள்வது கிடையாது.... இது முற்றிலும் ஒழிக்கப்படவேண்டிய ஒன்று இன்ஷா அல்லாஹ்
ReplyDeleteமனதுக்கும் அறிவிற்கும் விருந்து தந்த நிஜாம்க்கும் நன்றி.
ReplyDeleteதம்பி ஊருக்கு வார வெச்சிடுவே போலருக்கே!
மீண்டும் பதிவுக்கு நன்றி.
காக்காவின் கருத்து உணவை வீண் விரயம் செய்யவேண்டாம் என்ற பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்.