.

Pages

Saturday, April 6, 2013

இறைவேதம் வாழ்கிறது.



தலைமுறை தலைமுறையாக மக்கள் வாழ்கின்றனர். மடிகின்றனர்.
ஆனாலும், இறைவேதம் வாழ்கிறது.
இராஜ்யங்கள் உருவாகி இராஜ்யங்கள் மறைந்து போயின.
ஆனாலும், இறைவேதம் வாழ்கிறது.
இராஜாக்கள், சர்வாதிகாரிகள், ஆளுபவர்கள் வந்து மறைந்து போனார்கள்.
ஆனாலும், இறைவேதம் வாழ்கிறது.
கிழித்தார்கள், எரித்தார்கள், தூஷித்தார்கர். மாண்டு போனார்கள்.
ஆனாலும், இறைவேதம் வாழ்கிறது.
வெறுக்கப்பட்டு, சபிக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, ஒதுக்கப் பட்டது.
ஆனாலும், இறைவேதம் வாழ்கிறது.
சந்தேகிக்கப்பட்டு, கிண்டலடிக்கப்பட்டு, நகையாடப்பட்டது,
ஆனாலும்,  இறைவேதம் வாழ்கிறது.
நாத்திகவாதிகளால், சமூக விரோதிகளால் கண்டிக்கப்பட்டது,
ஆனாலும், இறைவேதம் வாழ்கிறது.
பொய்யானது, தேவையில்லாதது என்று சில கூட்டத்தாரால் மறுக்கப்பட்டது,
ஆனாலும், இறைவேதம் வாழ்கிறது.
எத்தனையோ ஆன்மீகவாதிகள் தோன்றி மறைந்தார்கள்,
ஆனாலும், இறைவேதம் வாழ்கிறது.
இறைவேதத்தினுடைய தனித்தன்மை சிலரால் மறுக்கப்பட்டது,
ஆனாலும், இறைவேதம் வாழ்கிறது.

நமக்கு வழிகாட்டியாக, ஆன்மீக பசியுள்ளோருக்கு உணவாக, ஈமந்தாரிகளுக்கு கிருபை கொடுக்கத் தக்கதாக இறைவேதம் வாழ்கிறது. இறைவேதத்தை ஓதுவது இன்பம், தியானிப்பது அதைவிட இன்பம், அது ஒரு அருமருந்து, ஈடு இணையற்றது, ஒப்பற்றது. ஓதுவோம், பாதுகாப்போம், அதன்படி நடப்போம்.

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன், அன்புடன்.
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o, K. Mohamed Aliyar. (Late)

3 comments:

  1. மாஷா அல்லாஹ் !

    அழகிய நினைவூட்டல்

    ReplyDelete
  2. இத்தருணத்தில் இறைவேதத்தை மக்களுக்கு நினைவூட்டியதற்கு நன்றி.

    இறைவேதத்திற்கு அழிவில்லை. அது என்றென்றும் வாழும்.

    ReplyDelete
  3. அழகிய நினைவூட்டல்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.