.

Pages

Sunday, April 28, 2013

தக்வாப் பள்ளி நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் !

நேற்று [ 27-04-0213 ] காலை 10 மணியளவில் தக்வாப் பள்ளியின் அலுவலகத்தில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தக்வா பள்ளியின் நிர்வாகத் தலைவர் K.S. அப்துல் சுக்கூர் அவர்கள் தலைமை வகித்தார்.
அக்கூட்டத்தில் கடந்த [ 19-04-2013 ] வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் கூட்டப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பள்ளியில் மார்க்கப் பயான் நடத்துவதற்கு 'உலமாக்கள் சபை' மூலம் ஒப்புதல் கடிதம் பெற்ற பிறகு அனுமதி வழங்குவது என்ற தீர்மானம் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது என்றும், இந்த தீர்மானத்தை மீறும் விதமாக நிர்வாக முடிவுக்கு எதிராக செயல்படுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர்.

மேலும் இந்த ஒரு பிரச்னையால் தக்வா பள்ளி மற்றும் மீன் மார்கெட் ஆகியவற்றின் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்று பள்ளியின் நிர்வாகிகள் குறைபட்டுக்கொண்டனர்.

7 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. நல்லது நடந்தால் சரிதான்.

    ReplyDelete
  3. இந்த ஆலிமால் நேர்ந்த பிரச்சனை என்ன, சுமூக தீர்வுக்கு வழி என்ன என்பதையும் அதிரடி முடிவாக இல்லாமல் அனைவரும் ஏற்கும் வழியில், இஸ்லாமிய வழியில் உடனடியாக நிர்வாகம் ஆலோசித்தால் ரொம்ப நல்லதாக இருக்கும்.

    சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் போது பாதிக்கப்படுவதும் ஒரு பகுதி நம்மவர்களாகத் தான் இருக்கும். எனவே இங்கு மார்க்கப் படி நடவடிக்கை மட்டுமே மிக அவசியம்.

    சட்டப்படி நடவடிக்கையில் பள்ளியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு என்ற சூழ்நிலை வந்து நாம் அவமானப்பட்டு விடக் கூடாது.

    அல்லாஹ் பாதுகாப்பானாக!

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்,

    மேற்கண்ட செய்தியை படித்தவுடன், தக்வா பள்ளி நிர்வாகத்தின் ஒரு உறுப்பினரிடம் இதைபற்றி விசாரித்த வகையில் அங்கு பேசப்பட்டதை கீழ்கண்டவாறு விவரித்தார்;

    கடந்த 19.04.2013 அன்று கூட்டப்பட்ட கூட்டத்தில் முறையாக அழைப்பு விடுக்காததால் சில உறுப்பினர்கள் அன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, மேலும் அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் வக்ஃப் நெறிமுறை சட்டப்படி ஐந்து உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாததாலும் அந்த தீர்மானம் செல்லத்தகாதவை என்று தெரியவந்ததால் நேற்று 27.04.2013 அன்று காலை 11.00 மணிக்கு அவசர கூட்டம் நடைபெற்றது, அதில் வழக்கம்போல் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளும் தொடரும் என வாய் மொழியாக முடிவெடுக்கப்பட்டது.

    ஆக, 19.04.2013 அன்றைய கூட்டமும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லாதவை யாக இருப்பதால் அந்த தீர்மானத்தை தொடர எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவித்தார்.

    நெறியாளருக்கு ஓர் வேண்டுகோள்:
    மற்ற சில அதிரை வளைதளங்களைப்போல் சாதகமாக இருந்தால் வைத்துக்கொண்டு பாதகமாகயிருந்தால் நீக்குகிறதைப்போன்று, இந்த பின்னூட்டத்தை தயவு செய்து நீக்க வேண்டாம், ஏதேனும் கருத்து தேவைப்பட்டால் பின்கருத்திடவும்.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்.

    சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் போது பாதிக்கப்படுவதும் ஒரு பகுதி நம்மவர்களாகத் தான் இருக்கும். எனவே இங்கு மார்க்கப் படி நடவடிக்கை மட்டுமே மிக அவசியம், சட்டப்படி நடவடிக்கையில் பள்ளியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு என்ற சூழ்நிலை வந்து நாம் அவமானப்பட்டு விடக் கூடாது.

    அல்லாஹ் பாதுகாப்பானாக........

    மற்ற சில அதிரை வளைதளங்களைப்போல் சாதகமாக இருந்தால் வைத்துக்கொண்டு பாதகமாகயிருந்தால் நீக்குகிறதைப்போன்று இல்லாமல் உள்ளதை உள்ள படியாக பதிந்தமைக்கு மிக்க நன்றி.........

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்,

    இந்திய நிதீக்ககே நீதிமன்றம் ஏற்றும் கலசாரதை தவிர்த்து, சுமுக உடன்பாடு காண்பதும். இறைபொருத்ததை நாடுவது சிறந்த நிர்வகதிறனை பறைசாற்றும்!!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.