முன்னதாக அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் தலைவர் MMS. சேக் நசுருதீன் அவர்களின் முன்னிலையில் அதிரை பேரூராட்சியின் தலைவர் SH. அஸ்லம் அவர்கள் பொருட்காட்சியை திறந்து வைத்தார்.
முதல்நாளில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பொதுமக்களை அரங்கிற்குள் இலவசமாக அனுமதித்தனர் நிர்வாகத்தினர். இந்த பொருட்காட்சியில் பல்வேறு நிறுவனத்தினரின் ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன.
தகவலுக்கு நன்றி இஸ்லாமிய வரம்பிற்கு உட்பட்டு வருடந்தோறும் சிறப்பாய் நடக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஇதன் மூலம் தர்கா கலாச்சாரம் ஒழியட்டும்
இது வளரட்டும்
மக்களுக்கு பொழுதுபோக்கு வாழ்த்துகள்!!!!
ReplyDeleteஅதிரை ஈஸ்ட் சார்பாக வாழ்த்துகள்!!!!!!!
ReplyDeleteஇத்தகைய வர்த்தக கண்காட்சி இனி வருடந்தோறும் சிறப்புடன் நடக்க. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவர்த்தக கண்காட்சி என்பது வரவேற்க வேண்டிய விஷயம் தான். ஆனால் இதில் அனாச்சாரங்களை புகுத்தாமலும், பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பும் கொடுத்தால் நல்லது.
thanks and keep it up
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஉலகம் போற போக்கை பார்த்தால் டிங்கிரி டிங்காலோ.
தகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
அதிரை ஈஸ்ட் முஹ்கல்லா சார்பாக வாழ்த்துகள்........
ReplyDeleteஇஸ்லாமிய வரம்பிற்கு உட்பட்டு வருடந்தோறும் சிறப்பாய் நடக்க வாழ்த்துக்கள், இதன் மூலம் தர்கா கலாச்சாரம் ஒழியட்டும்.
பள்ளி விடுமுறையிலிருக்கும் வாண்டுகளுக்குக் கொண்டாட்டம்.
ReplyDeleteகுறிப்பு -இங்கு பலதரப்பு மக்களும் வரக்கூடிய இடம் ஆதலால் பாதுப்காப்பு மிக முக்கியம்.
வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்லது நடந்தால் சரிதான்.
ReplyDeleteபொருட்காட்சிகள், மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் வரவேற்கத்தக்கவை. மேலும் ஷிர்க்கை ஏற்படுத்தக்கூடிய கந்தூரியையும் அதனை தொடர்ந்த அனாச்சாரங்களையும் ஒழிப்பதற்காக இஸ்லாமிய வரம்பிற்குட்பட்ட ஓர் மாற்று ஏற்பாடு என்ற நோக்கமாக இருந்தால் வரவேற்க்கத்தக்கது, பாராட்டுக்குறியது.
அதே சமயம், கந்தூரி ஷிர்க் அதனை தொடர்ந்த அனாச்சாரங்கள் போன்றவற்றை ஒழிப்பதற்கு இன்னொரு சமூக சமுதாய சீர்கேடுகளான இன்னிசை கலை நிகழ்ச்சி, இசை, இரட்டை அர்த்தமுள்ள உரையாடல்கள் & பாடல்கள், அதிலும் ஆண் பெண் ஒருசேர கலந்த பார்வையாளர்கள் கூட்டம் மேலும் இதன் மூலம் ஏற்படக்கூடிய தேவையற்ற அசாதாரண சூழ்நிலை இவை அனைத்தையும் எண்ணி பார்த்தால் கந்தூரியில் நடக்கும் அனாச்சாரங்களுக்கும் இங்கு நடக்கும் செயல்களுக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. மேலும், வெடி வெடிக்கப்பட்டு பணத்தை வீண் விரையம் செய்யாமல், அதை மற்ற நல்வழிகளான இஸ்லாமிய அழைப்பு பணி, ஷிர்க் மற்றும் பித்'அத் ஒழிப்பு பிரசுரங்கள் வெளியிட்டால் இதை காண வரும் அனைவரும் பயனடைவார்கள்.
மிக முக்கியமாக, இந்நிசை நிகழ்ச்சியின் மேடையில் (நேற்று) 28.04.2013 முதல் நாள் இரவு அரங்கேற்றிய நிகழ்ச்சியொன்றில் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் கூட வெளிப்படுத்த முடியாத இரட்டை அர்த்தமுள்ள கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டது. ஆண் பெண் ஒருசேர கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியை காணும்போது ஏற்படும் வீண் விபரீதங்களுக்கு நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.
மேலும், அவசிய தேவைகளை தவிர பெண்களை இதுபோன்ற காரியங்களுக்கு வெளியில் அழைப்பது திருமறையின் வரிகளுக்கு மாற்றமாகும். எத்தனையோ பெண்கள் தங்களது ஆண் மஹரம் இல்லாமல் வந்ததை காணமுடிகிறது. அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்;
"(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். (அல் குர்ஆன்: 33:33)"
பணத்திற்காக நம் பண்பாடு கலாச்சாரம் அனைத்தையும் அடகு வைத்துவிட்டு பொருட்காட்சி என்ற பெயரில் அதனோடு சேர்த்து மேலே குறிப்பிட்ட இஸ்லாத்திற்கு விரோதமான காரியங்களை அரங்கேற்றும் இந்நிகழ்சியின் ஏற்பாட்டாளர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ளவேண்டும்.
தவறுகளை கண்டுபிடிப்பது நமது நோக்கமல்ல, அதே சமயம் தவறுகளை சுட்டிக்காட்டி அதை சரிகாண வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இடப்படுகின்ற இந்த ஆக்கம் நல்லதை ஏவி தீமையை தடுக்கவேண்டும் என்ற இறை மறையின் கூற்றிற்கு இணங்க எழுதப்பட்டது.
குறிப்பு:
நான் அங்கு செல்வதற்கு இயலவில்லை, நண்பர்கள் வந்து என்னிடம் பகிர்ந்து கொண்ட வீடியோ காட்சிகளை கண்டபின் அறிந்துகொண்டேன்.
பொருட்காட்சிகள், மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் வரவேற்கத்தக்கவை. மேலும் ஷிர்க்கை ஏற்படுத்தக்கூடிய கந்தூரியையும் அதனை தொடர்ந்த அனாச்சாரங்களையும் ஒழிப்பதற்காக இஸ்லாமிய வரம்பிற்குட்பட்ட ஓர் மாற்று ஏற்பாடு என்ற நோக்கமாக இருந்தால் வரவேற்க்கத்தக்கது, பாராட்டுக்குறியது ஆனால் இங்கு அப்படி இல்லை நம் மானம் கப்பலேரும் விஷயம்தான் நடக்கின்றன......
ReplyDelete