.

Pages

Thursday, April 11, 2013

'அதிரை நியூஸ்’ வெளியிட்ட செய்தி எதிரொலி - சேதமடைந்த வாய்க்கால் தெரு சாலை சரிசெய்யப்பட்டது !

அதிரை பேரூராட்சியின் சார்பாக 13-வது வார்டுக்கு உட்பட்ட வாய்க்கால் தெருவின் முக்கிய பகுதிகளில் புதிய தார்சாலை  அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்ததையும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் தார்சாலையின் தரம் குறித்து ஆதங்கப்பட்டு கருத்து தெரிவித்ததையும் குறிப்பிட்டு கடந்த [ 08-04-2013 ] அன்று தளத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். 


அதோடு மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்டோரை தொடர்பு கொண்டு அவர்களின் கருத்தையும் பெற்று வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக இன்று மாலை சேதமடைந்த வாய்க்கால் தெருவின் சாலைப் பகுதிகள் சரிசெய்யப்பட்டது.

பணியின் போது 13-வது வார்டு உறுப்பினர் அப்துல் காதர், காண்ட்ராக்டர் சுல்தான் மற்றும் 'சமூக ஆர்வலர்' KMA. ஜமால் முஹம்மது ஆகியோர் உடனிருந்தனர்.

உறுதியளித்தபடி பணிகளை விரைவாக செயல்படுத்திய 13-வது வார்டு உறுப்பினர் அப்துல் காதர் மற்றும் காண்ட்ராக்டர் சுல்தான் ஆகியோருக்கு அதிரை நியூஸ் சார்பாக நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

5 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. வெறும் பதிவோடு விட்டு விடாமல் உடனுக்குடன் முயற்ச்சித்து சமூக சேவையை செவ்வன செய்த அதிரை நியூஸ்சிற்கு நன்றிகள் கோடி.

    [விழிப்புணர்வு வித்தகரும்,மனித உரிமைக்காவலர் அல்லவா களத்தில் இறங்கி இருக்கிறாகள்.! சொல்லவா வேணும்..!?]

    ReplyDelete
  3. சமூக சேவை செய்து வரும் அதிரை நியூஸ்( சகோ.சேக்கனா நிஜாம்) மிக்க நன்றி. மீண்டும் அதே சாலையை முழுமையாக சோதனை செய்து அங்கு காணும் அவலநிலையை படம் எடுத்து வெளியிட்டு குற்றத்துக்கு காரணமானோரையும் விசாரித்தால் இனி போடும் ரோடுகளாவது தரமாகி அதிரை அழகு பெறுமே!

    ReplyDelete
  4. இதற்க்கு முழு சமுக உழைப்பு கொடுத்த நமது அதிரை நியூஸ்க்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.