.

Pages

Monday, April 22, 2013

கடற்கரைத்தெருவில் தேங்கிய கழிவு நீரால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் !

கடற்கரைத்தெரு 8 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கழிவு நீர் வாய்கால் திறந்த நிலையில் மூடப்படாமால் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களால் குப்பைக் கூளங்கள் அதில் கொட்டப்பட்டு கழிவு நீர் வெளியேற முடியாமல் வாய்க்காலில் தேங்கி நிற்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு நோய் பரவும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.

வாய்க்காலில் குப்பைக் கூளங்களை கொட்டும் பொதுமக்களின் அலட்சியமும் , அவர்களிடேயே சுகாதார விழிப்புணர்வு இல்லாத ஒரு காரணமாக இருந்தாலும், உள்ளாட்சி ஊழியர்கள் இப்பகுதியில் கிடக்கின்ற குப்பைக் கூளங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் அப்புறப்படுத்தாததும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.






இது குறித்து 8 வது வார்டு கவுன்சிலர் சாகுல் ஹமீத் அவர்களை 'அதிரை நியூஸ்' சார்பாக தொடர்பு கொண்டுள்ளோம். விரைவில்  நம்மை அணுகி விளக்கம் தருவதாக உறுதியளித்துள்ளார்.

முஹம்மது முகைதீன் [ DIGI TECH ]

5 comments:

  1. வாழ்த்துக்கள் தம்பி முஹம்மது முகைதீன் அவர்களுக்கு,

    ஒரு கைதேர்ந்த செய்தியாளரைப் போல் உள்ள உங்களின் செய்தித் தொகுப்பு பொதுமக்களுக்கு நிச்சயம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

    உங்களை போன்ற இளைஞர்களின் பத்திரிக்கை ஆர்வம் வரவேற்க்கதக்கது.

    தொடர்ந்து செயல்பட மீண்டும் என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பதிவிக்கு நன்றி

    ReplyDelete
  3. முஹம்மத் முகைதீன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.

    ஊர்ச்செய்திகளை உடனுக்குடன் பதிந்து தனக்கென தனி இடம் பிடித்து நிற்கும் ''அதிரை நியூஸ்சிற்கு'' தாங்களைபோல் தன்னார்வமிக்கவர்களும் சேர்ந்து செயல் படுவதில் மிக்க மகிழ்ச்சியே.! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    அது என்ன?
    கழிவு நீரா?
    நமதூரிலையா?
    அதுவும் 8 வது வார்டிலையா?
    நல்லா செக் பண்ணுணீங்களா?
    எல்லா வார்டுலேயும் ஓடுதே அது கழிவு நீரா?
    அடப்பாவிகளா.
    அப்போ அதை சும்மா விடக்கூடாது.
    சுத்தம் செய்யச்சொல்லி நெருக்கடி கொடுக்கணும்.
    நெருக்கடி கொடுக்க ஸ்டார்ட் பண்ணியாச்சா?

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  5. முஹம்மது முகைதீன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் இது போல் கிடக்கும் அசுத்தமானவைகளை படம் எடுத்து அந்த அந்த வார்டு கவுன்சிலர்களுக்கு காட்டவும்.இது முறைப்படி சுத்தம் செய்ய சொல்லவும்.ப்ளிஸ் ப்ளிஸ்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.