.

Pages

Wednesday, April 10, 2013

செட்டியா குளம் ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பாக அலுவலர்கள் நேரில் ஆய்வு !

அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் நடுத்தெருவில் உள்ள செட்டியா குளம் – தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு, இந்த பணிகளுக்கான ஒப்பந்தமும் இறுதி செய்யப்பட்டுள்ளன.


இந்த பணிகளை மேற்கொண்டு தொடர்வது தொடர்பாக இன்று மாலை 4.30 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து உதவி செயற்பொறியாளர்கள் வருகை தந்து பார்வையிட்டனர். அப்போது அப்பகுதியைச் சுற்றி ஆக்கிரமணம் செய்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வருகின்ற வாரங்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளை நில அளவீடு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. நிலஅளவீடு செய்யப்பட்டவுடன் மற்ற பணிகள் அனைத்தும் மும்முரமாக செயல்படுத்தப்பட்டு விரைவாக முடிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றன.

ஆய்வுகள் மேற்கொள்ளும் போது காண்ட்ராக்டர் சுல்தான் மற்றும் மணிச்சுடர் நிருபர் சாகுல் ஹமீத் ஆகியோர் உடனிருந்தனர்.

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

  2. பதிவு அறியத்தந்தமக்கு நன்றி.

    ReplyDelete
  3. தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.