.

Pages

Friday, April 5, 2013

சத்திரம் ஜாமிஆ மஸ்ஜித் கட்டுமானப்பணிக்கு அமீரக அதிரை சகோதரர்கள் உதவி !

சேதுபெருவழிச்சாலையில் அமைந்துள்ள கடற்கரையோர கிராமமான சேதுபாவாசத்திரத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட ஏழை மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில வருடங்களாக தொழுவதற்காக புதிதாக மஸ்ஜீத் கட்டும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.


சேதுபாவாசத்திரம் ஜமாத்தினரின் அன்பு வேண்டுகோளை அடுத்து அமீரகவாழ் அதிரை சகோதரர்கள் குறிப்பாக சகோ. K. சேக்தாவூது அவர்களின் சீரிய முயற்சியால் அமீரகத்தில் ரூபாய் ஒரு லட்சம் [ 100,000/- ] திரட்டப்பட்டு அந்தப் பணத்தை நமதூர் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள் சகோ. S. ஜஃபருல்லா மற்றும் B. ஜமாலுதீன் ஆகியோர் முன்னிலையில் நேற்று [ 04-04-2013 ] சேதுபாவாசத்திரம் ஜமாத்தினரிடம்  ஒப்படைக்கப்பட்டது.

"சத்திரம் ஜாமிஆ மஸ்ஜித் கட்டுமானப்பணிக்கு உதவிடுவீர்" என்ற தலைப்பில் கடந்த [ 15-03-2013 ] அன்று தளத்தில் செய்தி வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

உதவிகள் செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் சத்திரம் ஜாமிஆ மஸ்ஜித் கட்டுமானப்பணி குழுவினரின் சார்பாக நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொண்டனர்.

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. அல்லாஹ்வை தொழுகும் பள்ளிக்கு அல்லி வழங்குவதால் ஈருலகிலும் நன்மை அடையலாம்.

    இப்பதிவை படிப்பவர்கள் தாராளமாக தாங்களின் நிதியை வாரிவழங்கிடுங்கள்.

    ReplyDelete
  3. அல்லாஹுக்காக கட்டக்கூடிய பள்ளிக்கு அள்ளி வழங்கவும்.அல்லாஹு இடத்தில் நிச்சயம் கூலி உண்டு.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.