.

Pages

Monday, April 1, 2013

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தக்வாப் பள்ளி நிர்வாகிகளுடன் ஓர் நேர்காணல் [ காணொளி ]

அதிரை நடுத்தெரு தக்வா பள்ளிவாசல் வக்ஃபிற்கு ஏழு புதிய டிரஸ்டிகள் நியமன ஒப்புதல் ஆணை தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மை செயல் அலுவலரால் கடந்த 06-03-2013 அன்று பிறப்பிக்கப்பட்டது. 
இன்று [ 01-04-2013 ] மாலை 4.30 மணியளவில் தக்வாப் பள்ளியின் அலுவலகத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பொறுப்புகளுக்கு தஞ்சை மாவட்ட வக்ஃபு கண்காணிப்பாளர்  M. உமர் பாருக் மற்றும் தஞ்சை மாவட்ட ஆய்வாளர் M. சேக் முஹம்மது ஆகியோர் முன்னிலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் : K.S. அப்துல் சுக்கூர்
செயலாளர் :  A. அப்துல் சுக்கூர்
பொருளாளர் : S. முஹம்மது ஜமீல்

இவர்களின் பதவிகாலம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தக்வாப் பள்ளி நிர்வாகிகளுடன் மணிச்சுடர் நிருபர் சகோ. சாகுல் ஹமீது அவர்களின் நேர்காணல்...

5 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. சுன்னத் வல் ஜமாஅத் முறைபடிதான் தக்வா பள்ளியில் செயல்பாடுகள் இருக்கும் என்று புதிதாக பொறுப்பு ஏற்றிருக்கும் தலைவர் கூறினார்கள் அதன் படியே செயல்பட்டால் தான் மறுமையில் சுவர்க்கம் கிடைக்கும் என்பதில் யாருக்கும் மாறுப்பட்ட கருத்து இருக்கமுடியாது ஆனால் எது சுன்னத் வல் ஜமாஅத் என்பதில் தான் மக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றனர் இது பற்றி அறிந்துக்கொள்ள இதை பாருங்கள்

    சுன்னத் ஜமா என்றால் யார்?

    http://www.adiraitntj.com/2012/03/blog-post_26.html

    ReplyDelete
  3. புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தக்வா பள்ளி சுன்னத் வல் ஜமாஅத் பள்ளி, அங்கே வேறு யாரும் no allowed னு சொன்னால் மட்டும் போதாது. சுன்னத் வல் ஜமாஅத் (உண்மையான சுன்னத் வல் ஜமாஅத்) கொள்கையில் நீங்கள் முதலில் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் இருக்கிறீர்களா என்று பாருங்கள். மௌலூது, ஹத்தம், பாத்திஹா, தக்வா பள்ளிவாசல் உள்ளே கப்ர் இதுவெல்லாம் ஷியா கொள்கை,

    http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/sunnath_jamath_yar/

    ReplyDelete
  5. தக்வா பள்ளி சுன்னத் வல் ஜமாஅத் பள்ளி, அங்கே வேறு யாரும் no allowed னு சொன்னால் மட்டும் போதாது. சுன்னத் வல் ஜமாஅத் (உண்மையான சுன்னத் வல் ஜமாஅத்) கொள்கையில் நீங்கள் முதலில் இருக்கிறீர்களா என்று பாருங்கள். மௌலூது, ஹத்தம், பாத்திஹா, தக்வா பள்ளிவாசல் உள்ளே கப்ர் இதுவெல்லாம் ஷியா கொள்கை,

    http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/sunnath_jamath_yar/

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.