.

Pages

Friday, May 31, 2013

பரப்பரப்பான ஆட்டத்தின் இறுதியில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட அதிரை WSC அணியினர் !

அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ WSC ] நடத்தும் மாநில அளவிலான ஆம் 13 ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி மேலத்தெரு WSC மைதானத்தில் நேற்று [ 30-05-2013 ] இரவு சிறப்பாக துவங்கியது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய தின இறுதி போட்டியில் வலுவான இரு அணிகளாகிய திருவாரூர் அணியினரும், அதிரை WSC அணியினரும் மோதினர். பரப்பரப்பான ஆட்டத்தின் இறுதியில் திருவாரூர் அணியினர் வெற்றி பெற்றனர்.

இதனைத்தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.








முதல் பரிசு : ரூபாய் 15,000 /- [ திருவாரூர் அணியினர்  ]
இரண்டாம் பரிசு : ரூபாய் 12,000 /- [ அதிரை WSC அணியினர் ]
மூன்றாம் பரிசு : ரூபாய் 10,000 /- [  சென்னை அணியினர்  ]
நான்காம் பரிசு : ரூபாய் 8,000 /- [  கோவை அணியினர் ]

இன்றைய இறுதி ஆட்டத்தைக் மின்னொளியில் காண ஏராளமான பார்வையாளர் மற்றும் விளையாட்டுப் பிரியர்கள் ஆகியரோடு பொதுமக்களும் கண்டு ரசித்தனர்.

நன்றி : ஜெஹபர் சாதிக்

மரண அறிவிப்பு [ நடுத்தெரு ]


 
நடுத்தெரு கீழ்புறம் வாய்க்கால் தெருவைச் சார்ந்த மர்ஹும் செ.மு.முஹம்மது  ஹுசைன் அவர்களின் மகளும், மர்ஹும் செ.அ. அஹமது முகைதீன் அவர்களின் மனைவியும், ஜமால் முஹம்மது அவர்களின் சகோதரியுமாகிய ஹாஜிமா ஆயிஷா அம்மாள் அவர்கள் இன்று [ 31-05-2013 ] மாலை வஃப்பாத்தாகி விட்டார்கள் .

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9:30 மணியளவில்  தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.

அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு கிளையின் சார்பாக அரசு உதவி பெறுவதற்கான வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரம் விநியோகம் !

அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் மேற்கு கிளையின் சார்பாக அரசு வழங்குகின்ற நலத்திட்டங்களில் ஒன்றாகிய திருமண நிதி உதவி பெறுவதற்கான வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் இன்றைய ஜும்மாவில் விநியோகிக்கப்பட்டன.



எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக அதிரையின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைத்தல், நகரை தூய்மைப்படுத்துதல், அரசு உதவிகளை பெற்றுத்தருதல், மருத்துவ உதவி செய்தல் ஆகியன அவ்வப்போது செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

அதிரையளவில் சாதனை புரிந்த பள்ளிகள் – ஓர் அலசல் !

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொது தேர்வு எழுதிய மாணவ மாணவியரின் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் அதிரையளவில் சாதனை நிகழ்த்திய பள்ளிகளைப் பற்றிய ஒரு அலசல் !

இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 
[ Click on Image to enlarge ]



காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 




காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 




குறிப்பு : இதுபோல் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் சாதனை நிகழ்த்திய பள்ளிகளின் விவரங்களும் பதியப்படும்.

Thursday, May 30, 2013

WSC நடத்தும் மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி !

அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ WSC ] நடத்தும் மாநில அளவிலான ஆம் 13 ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி மேலத்தெரு WSC மைதானத்தில் இன்று [ 30-05-2013 ] இரவு 7 மணியளவில் சிறப்பாக துவங்கியது.
இன்றைய முதல் ஆட்டமாக வேலூர் அணியினரும், கோவை அணியினரும் ஆடவுள்ளனர். அதனைத்தொடர்ந்து சென்னை அணியினரோடு அதிரை WSC அணியினர் மோத உள்ளனர்.

முதல் ஆட்டத்தைக் காண ஏராளமான பார்வையாளர் மற்றும் விளையாட்டுப் பிரியர்கள் ஆகியரோடு பொதுமக்களும் கண்டு ரசித்து வருகின்றனர்.








இரண்டு நாட்கள் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகளின் நிரல் :



Thanks : Organizer of WSC Team
Special Thanks to : Bro. Jahabar Sathick

கால் இறுதியில் AFFA அணியினர் தோல்வி


மேலநத்தம் கால்பந்து கழகம் நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர்போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில்(30/5/2013) இன்று அதிரை AFFA அணி தஞ்சை ஆம்பலாப்பட்டு அணியினை எதிர்கொண்டது இதில் நமது அணி 1 கோல் வாங்கி வெற்றி வாய்ப்பை இழந்தது.

நமது அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆடினர் துரதிஸ்டவசமாக வெற்றியை இழந்தது AFFA


தகவல் : AFFA

அதிரைப் பேரூராட்சித் தலைவர் மற்றும் செயல் அலுவலர் ஆகியோரின் அன்பான வேண்டுகோள் [ காணொளி ] !

'ஒரு பிளாஸ்டிக் பையை சராசரியாக நாம் பயன்படுத்திக் கொள்ளப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கானஆண்டுகள்' என்பது ஆய்வு அறிக்கைகள்.
பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து சுகாதாரமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழல் பாதுகாப்பைப் பெற வேண்டும் என்ற உயரிய விழிப்புணர்வு கருத்துகளுடன் நமதூர் பேரூராட்சி நிர்வாகத்தால் ப்ளாஸ்டிக் பை மற்றும் அதன் தொடர்புடைய மக்காத பொருட்களை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் கடந்த ஆண்டு தடை செய்யபட்டதோடு மட்டுமல்லாமல் அவற்றை மீறுவோர் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வந்தன.

தடை குறித்த அரசின் ஆணை நகல் எண் : 132 / 2012 Dated 16-08-2012 அன்று தஞ்சை மாவட்ட அரசிதழிலும் வெளியிடப்பட்டன.

அதில்,
முதல் தடவை மீறுவோர் மீது ரூபாய் 250/-ம்
இரண்டாவது தடவை மீறுவோர் மீது ரூபாய் 500/-ம்
மூன்றாவது தடவை மீறுவோர் மீது ரூபாய் 1000/-ம்

மேலும் தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் மீறினால் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளடைவில் பொதுமக்களின் போதிய ஒத்துழைப்பு மற்றும் மீறுவோர் மீது பேரூராட்சியின் போதிய நடவடிக்கை ஆகியன சற்று குறைந்து காணப்பட்டதால் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடுகள் நகரில் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தன. இதனால் நகரில் பிளாஸ்டிக் பைகளின் குப்பைகள் ஆங்காங்கே காணப்பட்டதோடு மட்டுமல்லாமல் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது.

இதன் தொடர்ச்சியாக புதிதாக பொறுப்புக்கு வந்த அதிரை பேரூராட்சியின் செயல் அலுவலர் அவர்கள், அதிரை பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம் அவர்களின் வழிகாட்டுதலின் படி மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு அதிரை மக்களிடயே விழிப்புணர்வை ஏறபடுத்தி நகரில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை அறவே இல்லாமல் ஆக்க வேண்டும் என்ற நல்லதொரு செயல் திட்டத்துடன் வருகின்ற [ 01-06-2013 ] அன்று முதல் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு அதிரை நகரில் தடை செய்வதற்குன்டான அறிவிப்புகளை நாளிதழ், ஒலிப்பெருக்கிகள், தொலைக்காட்சி, துண்டு பிரசுரம் ஆகியனவற்றில் பிராச்சாரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அதிரை பேரூராட்சித் தலைவர்  S.H. அஸ்லம் மற்றும் செயல் அலுவலர் ஆகியோரை  'அதிரை நியூஸ்' சார்பாக அணுகி  அவர்களின் கருத்தைப்பெற்றோம்.

செக்கடி மேட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் உரியவரிடம் ஒப்படைப்பு - பேரூராட்சியின் துரித நடவடிக்கை [ காணொளி ] !

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரை செக்கடிப் பள்ளி நிர்வாகத்திற்கு உட்பட்ட செக்கடி மேடு இடத்தில் புதிதாக கட்டி வருகின்ற கட்டுமானப் பகுதியிலிருந்து ஆர்.டி.ஓ உத்தரவின் பேரில் சில பொருட்கள் அதிரை பேரூராட்சி ஊழியர்களால் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து அதிரை பேரூராட்சித் தலைவர் அவர்களின் முயற்சியால் பறிமுதல் செய்யப்பட்டப் பொருட்கள் அனைத்தும் இன்று [ 30-05-2013 ] காலை செக்கடிப் பள்ளி நிர்வாகத்தாரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.






இதுகுறித்து 'அதிரை நியூஸ்' சார்பாக அதிரை பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம் அவர்களை அணுகி விளக்கம் கோரினோம்.

Wednesday, May 29, 2013

அதிரை தரகர் தெருவில் ASC நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி !

அதிரை [ தரகர் தெருவில் ] ஆசாத் நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் [ ASC ] நடத்தும் மாபெரும் 8 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி நேற்று இரவு முகைதீன் ஜும்மா பள்ளி எதிரே அமைந்துள்ள மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

நேற்றைய ஆட்டத்தில் அதிரை ப்ரெண்ட்ஸ் அணியினரும், ஆசாத் நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் [ ASC ] அணியினரும் மோதினர்.

முன்னதாக முதல் ஆட்டத்தை தரகர் தெரு ஜமாத் நிர்வாகத்தினர் கைகுலுக்கி துவக்கி வைத்தனர். நேற்றைய முதல் ஆட்டத்தை பார்வையாளராக கலந்துகொண்ட ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

இந்த மாபெரும் தொடர் போட்டியில் கடலூர், மாயாவரம், திருவாரூர் உள்ளிட்ட வெளியூர் அணிகள் பல பங்கு பெற்று விளையாட உள்ளனர்.

மேலநத்தத்தில் அதிரை AFFA அணியினர் வெற்றி !


மேலநத்தம் கால்பந்து கழகம் நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் இன்று (29/5/2013) அதிரை AFFA அணி கலந்துக்கொண்டு மன்னார்குடி அணியினை எதிர்கொண்டது இதில் நமது அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது.

நமது அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆடி அணியினை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றனர்.

முபிஸ் ஒரு கோலும், சஃபா ஒரு கோலும் அடித்தனர்



தகவல் : AFFA

தக்வாப் பள்ளி மீன் மார்க்கெட் ஏலம் அறிவிப்பு !

அதிரை தக்வாப் பள்ளிக்கு சொந்தமான கடைத்தெரு மீன் மார்க்கெட் தொடர்புடையவைகளுக்கு பகிரங்க ஏலத்திற்கான அறிவிப்புகள் இன்றைய தினசரி நாளிதழிலும், பள்ளிவாசல்களிலும் தக்வாப் பள்ளியின் நிர்வாகம் சார்பாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.



அதிரையில் நடைபெற்ற எளிய திருமணம் !

அதிரை கடற்கரைத் தெருவை சார்ந்த மணபெண்னுக்கும் கும்பகோணம் நாச்சியார் கோவிலை சேர்ந்த மணமகனுக்கும் கடந்த [ 26-05-2013 ] அன்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது

இதில் மார்க்க பிராச்சாரகர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். இதில் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





நன்றி : தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை