.

Pages

Thursday, May 23, 2013

விறுவிறுப்புடன் நடைபெற்ற இன்றைய கால்பந்தாட்டத்தில் இறுதி போட்டிக்கு நுழைந்தது அதிரை AFFA அணி !

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டியின் முதல் ஆட்டம் கடந்த [ 10-05-0213 ] முதல் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் பல்வேறு ஊர்களிலிருந்து வருகை தந்த கால்பந்தாட்ட வீரர்கள் பலர் போட்டிகளில் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர்.

தொடர்ந்து பரப்பரப்பாக நடைபெற்ற வந்த போட்டியில் இன்றைய அரையிறுதி ஆட்டமாக வலுவான அணிகளாகிய அதிரை AFFA அணியினர் மற்றும் தஞ்சை நேதாஜி அணியினர் மோதினர். விறு விருப்புடன் நடந்த வந்த ஆட்டத்தின் இறுதியில் அதிரை AFFA அணியினரின் நட்சத்திர வீரர்கள் தாரிக் மற்றும் ராஜிக் ஆகியோர் தலா ஒரு கோல் போட்டு 2-1 என்ற கணக்கில் தங்களின் அணி வெற்றி பெற உதவினர்.

நாளை [ 24-05-2013 ] நடைபெற இருக்கிற இறுதி போட்டியில் தஞ்சை அருள் அணியினரோடு அதிரை AFFA அணியினர் விளையாட தகுதி பெற்றுள்ளனர். இதில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பரிசளிப்பும் நடைபெற உள்ளது


ஆட்டம் துவங்குவதற்கு முன்னதாக இன்று அதிரையில் வஃபாத்தான முன்னாள் கால்பந்தாட்ட வீரரும், தமிழக வேளாண் விற்பனைத்துறையின்  ஆய்வாளரும், அதிரை பைத்துல்மால் இணைச்செயலாளருமாகிய ஹாஜி C. முஹம்மது இப்ராஹீம் அவர்களுக்கு ஒரு நிமிட நினைவு கூறப்பட்டது.

பெரும் திரளாக கலந்து கொண்ட கால்பந்தாட்ட ஆர்வலர்களின் மஃஹ்ரிப் தொழுகைக்குரிய ஏற்பாடுகளை அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] சார்பாக விளையாட்டு மைதானத்திலேயே செய்யப்பட்டு இருந்தன.

6 comments:

  1. அதிரை AFFA அணியின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்

    அதிரையில் பலத்த காற்று வீசிக்கொடிருப்பதால் ஆட்டத்திற்கு பெரிதும் இடையிராக அமைந்தது

    மணல் காற்றுடன் மைதானத்தில் முழுதும் நிறைந்திருந்த ரசிகர்களுக்கு பெரிதும் சிரமத்தை கொடுத்தது

    அதிரை AFFA கால்பந்தாட்டத்தில் மஃஹ்ரிப் தொழுகை ஏற்பாடு செய்ததற்கு AFFA நிர்வாகத்திற்கு ஜசக்கல்லாஹ் ஹைர்

    ReplyDelete
  2. இறுதி போட்டியில் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. அதிரையின் செய்திகளை உடனுக்குடன் தருவதில் உங்களுக்கு நிகர் நீங்களே அதிரையின் செய்தித்தொடர்பாளர் என்று உங்களை கூறினாலும் மிகையல்ல சகோ.சேக்கன்னா நிஜாம் அவர்களே

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அதிரை AFFA கால்பந்தாட்டத்தில் மஃஹ்ரிப் தொழுகை ஏற்பாடு செய்ததற்கு AFFA நிர்வாகத்திற்கு ஜசக்கல்லாஹ் ஹைர், நான் அதிரையில் பிறந்ததற்கு இன்று பெருமை படுகிறேன். அல்லாஹ் அக்பர்...

    ReplyDelete
  6. அதிரை AFFA அணி இறுதி போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.