மராட்டிய மாநிலத்தில் அன்றைய காலகட்டத்தில் மாநில கவர்னராக பணியாற்றிய சி. சுப்பிரமணியம் அவர்களின் முன்னிலையில் மும்பையிலும், தமிழகத்தில் மாநில கவர்னராக பணியாற்றிய பாத்திமா பீவி அவர்களின் முன்னிலையில் மல்லிபட்டினத்திலும் தண்ணீரில் பல மணி நேரங்கள் மிதந்து காட்டி சாதனை நிகழ்த்தியுள்ளார். மேலும் பல மாநிலங்களுக்கும், பல வெளிநாடுகளுக்கும் சென்று சாதனை நிகழ்த்தியுள்ள இவர் தன் பிறந்த மண்ணில் உள்ள செக்கடி குளத்தில் மணிக்கணக்கில் மிதந்து காட்டி பல முறை சாதனை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
தனது முதிய வயதிலும் சாதனைகள் பல புரிந்து அதிரைக்கு பெருமை சேர்த்துத் தந்த மர்ஹூம் முஹம்மது அபூபக்கர் அவர்களை என்றென்றும் நினைவில் கொள்வோம்.
உலக சாதனை படைத்த மர்ஹூம் அதிரை முஹம்மது அபூபக்கர் அவர்களின் வரிசையில் அவரது மகன் மொய்தீன் அப்துல் காதர் அவர்களும் அமைதியாக இருந்து அனைவரையும் வியக்கவைக்கும் அளவிற்கு ஒரு சாதனை படைத்து வருகிறார் !? அது என்ன சாதனை !?
இறைவன் நாடினால் பதிவில் விரைவில்...
பதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அவர்களின் மகனின் சாதனையை பார்க்காமல் என் மனம் வேதனையாக இருக்குது.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
//தனது முதிய வயதிலும் சாதனைகள் பல புரிந்து அதிரைக்கு பெருமை சேர்த்துத் தந்த மர்ஹூம் முஹம்மது அபூபக்கர் அவர்களை என்றென்றும் நினைவில் கொள்வோம்.///
ReplyDeleteபதிந்து நினைவூட்டிய அதிரை நியூஸ்சிற்கு நன்றி.
எனது சிறுபருவத்தில் நமதூர் செடியன் குளத்திலும் பலமணிநேரம் மிதந்து இருக்கிறார். மர்ஹூம் புளியங்கொட்டை ஹாஜியார்.
Thanks to recall all those info with wonderful pictures
ReplyDeleteஉலக சாதனை படைத்த மர்ஹூம் அதிரை முஹம்மது அபூபக்கர் (புளியங்கொட்டை அப்பா)அவர்களின் வரிசையில் அவரது மகன் மொய்தீன் அப்துல் காதர் அவர்களும் சாதனை படைக்க எனது துவாவும் வாழ்த்தும்................
ReplyDeleteWoW! Hajiyar made wonderful record.I couldn't find any Adirai and tanjavur district why not in tamilnadu people, no one didn't,I dont think so.I knew that if muslim people made record all of media never publish to public at all.Long time ago we are saw when he smart floating in chekkedy kulam.It was an amazing!!!LIE ON THE SURFACE OF A WATER
ReplyDeleteAnd........Thanks lot for FOTOS.
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்!
ReplyDeleteநேற்றும், இன்றும் நாளையும் அதிரைக்குப் பெருமை சேர்க்கவே சாதனையாளர்கள் பிறந்தார்கள்; பிறக்கின்றார்கள்; பிறந்து வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள்; இனியும் இன்ஷா அல்லாஹ் பிறப்பார்கள். அவர்களின் திறன் வியந்து செயல் மறந்து வாழ்த்துவதில் முன்னிலை வகிக்கும் அதிரை நியூஸ் மற்றும் சமூக விழிப்புணர்வுப் பக்கங்கள், அதிரை எக்ஸ்பிரஸ் மற்றும் அதிரை நிருபர் வலைத்தளங்கட்கும் நன்றி கூறுவோம்.
தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்பதே ஒவ்வொரு சாதனையாளர்களின் |”உளத்தூய்மையான” இக்லாஸூடன் கூடிய நல்லெண்ணமாகும். இதில் சிலர் மவுனமாக இருந்து பிறர்க்குத் தெரியாமல் மறைத்து விடலாம்; சிலர் பிறர் அறியச் செய்வர். இப்படிப் பிறர் அறியச் செய்ப்வர்களை “தற்பெருமைக்காரன்” என்றும், “கர்வம்-தலைக்கனம்” உள்ளவன் என்றெல்லாம் சேற்றை அள்ளி அவர்கள் மீதுவீசினாலும், தான் பெற்ற இன்பம் பிறரும் பெற்று அதிரைக்குப் பெருமை சேர்த்தல் மட்டுமே இலக்காக உள்ளவர்கள் “போற்றுவார் போற்றட்டும்; தூற்றுவார் தூற்றட்டும்” என்ற எண்ணத்தில் போற்றுவோரையும், தூற்றுவோரையும் சமமாகவே எண்ணி, “வாழ்க வளமுடன்; சூழ்க பலமுடன்” என்று வாழ்த்திக் கொண்டே இருப்பார்கள்.
மவுனமாக இருக்கும் அன்புச் சகோதரர் முஹைதீன் அவர்கள் தன் சாதனையை வெளிப்படுத்துங்கள் என்று கோருகிறேன், ஓர் அதிரையன் என்ற உரிமையுடன், அதிரையின் பால் இருக்கும் அக்கறையில், அதிரைக்கு அப்பால் அக்கறையில்...
This comment has been removed by the author.
ReplyDeleteAlhamdulillah, May the Almighty bless his entire Akira and enter in to paradise. Thanks for recalling my grandpa's Photos
ReplyDeleteபுளியங்கொட்டை அபூபக்கர் அப்பாவின் சாதனைகளை பெரும்பாலான இளம்தலைமுறை அதிறையர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த புகைப்படங்கள் 10-12 வருடங்களுக்கு முன்பே www.adirampattinam.com இல் பதிவேற்றப்பட்டுள்ளன. எனினும் மீண்டும் அறியத்தந்த அதிரை நியூஸ் குழுவிற்கு நன்றியும் வாழ்த்துகளும்.
ReplyDeleteஇந்த பதிவுக்கு மிக்க நன்றி அதிரை நியூஸ்க்கு.
ReplyDeleteஅதிரை நியூஸ்யில் பதிந்த பிறகுதான் நமக்கெல்லாம் தெரிய வருது நம்ம ஊரில் உலகச்சாதனை படைத்த மர்ஹூம் அதிரை முஹம்மது அபூபக்கர் (புளியங்கொட்டை அப்பா)அவர்களின் சாதனை.
இது போன்று எத்தனையோ சாதனைகள் புதைத்து கிடைகின்றது.
இது போன்று அவரது மகன் மொய்தீன் அப்துல் காதர் அவர்களும் சாதனை படைக்க எனது துவாவும் .வாழ்த்துக்களும்.