அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டியின் முதல் ஆட்டம் கடந்த [ 10-05-0213 ] முதல் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் பல்வேறு ஊர்களிலிருந்து வருகை தந்த கால்பந்தாட்ட வீரர்கள் பலர் போட்டிகளில் பங்கு பெற்று விளையாடி வந்தனர்.
தொடர்ந்து பரப்பரப்பாக நடைபெற்ற வந்த போட்டியின் கடைசி நாளான இன்று இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் வலுவான இரு அணிகளாகிய அதிரை AFFA அணியினர் மற்றும் தஞ்சை அருள் அணியினர் மோதினர். விறு விருப்புடன் நடந்த வந்த ஆட்டத்தின் இறுதியில் தஞ்சை அருள் அணியினர் ஒரு கோல் போட்டு 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.
இதைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது.
தஞ்சை மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் சிவாநந்தம் அவர்கள் போட்டியை துவக்கி வைத்ததுடன் மட்டுமல்லாமல் வெற்றி பெற்ற கால்பந்தாட்ட வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி கெளரவித்தார்.
முதல் பரிசு : ரூபாய் 20,000 /- [ தஞ்சை அருள் அணியினர் ]
இரண்டாம் பரிசு : ரூபாய் 15,000 /- [ அதிரை AFFA அணியினர் ]
முன்னதாக AFFA வின் முன்னாள் செயலாளர் S. முஹம்மது புஹாரி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, பட்டுக்கோட்டை முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் R. கோபாலக்கிருஷ்ணன், MB அபூபக்கர், M.O. செய்யது முஹம்மது புகாரி, AFFA வின் செயலாளர் சமியுல்லா,AFFA வின் தலைவர் MA. முஹம்மது தமீம், AFFA வின் துணை செயலாளர் அஹமது அனஸ்,கோச்சர் லியாக்கத் அலி ஆகியோருடன் S. அஹமது ஹாஜா மற்றும் ஆலோசகர் N. சேக் தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்புரை நிகழ்த்திய பேராசிரியர் M. முஹம்மது அப்துல் காதர் அவர்களோடு காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி, காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் ராமச்சந்திரன், கால்பந்தாட்டக் கழக தஞ்சை மாவட்டத் தலைவர் கோபாலக்கிருஷ்ணன் ஆகியோர் இன்றைய கடைசி ஆட்டத்தின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இறுதியில் A. ஜூபைர் அவர்கள் நன்றியுரை வாசித்தார்.
இன்றைய கடைசி ஆட்டத்தைக் காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.
இறுதிப் போட்டியில் விளையாடிய இரண்டு அணினருக்கும் எனது பாராட்டுக்கள்
ReplyDeleteவெற்றிபெற்ற அணியினருக்கும் - தொடர் போட்டியில் பங்கு பெற்ற அணியினருக்கும் - வெற்றிகரமாக நடத்தி முடித்த AFFA குழுவினருக்கும் என் பாராட்டுகள் - வாழ்த்துக்கள்
ReplyDeleteஇப்போட்டியில் முதல் பரிசை தட்டிச்சென்ற அணியினருக்கும் இரண்டாமிடத்தைப்பெற்ற அதிரை AFFA அணியினருக்கும் மற்றும் இப்போட்டியில் பங்குபெற்று சிறப்புடன் விளையாடிய அனைத்து அணியினருக்கும் என் உளம் நிறைவான வாழ்த்துக்கள்.
ReplyDeleteவெற்றிபெற்ற அணியினருக்கும் - தொடர் போட்டியில் பங்கு பெற்ற அணியினருக்கும் - வெற்றிகரமாக நடத்தி முடித்த AFFA குழுவினருக்கும் எங்களின் பாராட்டுகள் - வாழ்த்துக்கள்
ReplyDeleteவெற்றி பெற்ற தஞ்சை அணியினருக்கும், இறுதிப் போட்டியை எட்டிய நமது அதிரை AFFA அணியினருக்கும் வாழ்த்துக்கள்.... மனம் தளராமல் அடுத்த போட்டியில், இன்ஷா அல்லாஹ் வெற்றிக் கோப்பையை நமது அணியினர் தட்டிச்செல்ல முயற்சிப்பார்கள்......
ReplyDeleteவெற்றி பெற்ற தஞ்சை அணியினருக்கும், இறுதிப் போட்டியை எட்டிய நமது அதிரை AFFA அணியினருக்கும் வாழ்த்துக்கள்.... மனம் தளராமல் அடுத்த போட்டியில், இன்ஷா அல்லாஹ் வெற்றிக் கோப்பையை நமது அணியினர் தட்டிச்செல்ல முயற்சிப்பார்கள்......
ReplyDeleteஇப்போட்டியில் வெற்றிபெற்ற தஞ்சை அணியினருக்கும் இரண்டாம் இடம் பிடித்த AFFA அணியினருக்கும் எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் இனி வரும் கால்பந்தாட்ட போட்டிகளில் AFFA அணி முதல் இடம் பெற விடாமுயற்ச்சி செய்யவேண்டும்.