அரசியல், தொழில், ஊடகம், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் செல்வாக்கு மிக்க பெண்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. பண பலம், ஊடகத்தில் அளிக்கப்படும் முக்கியத்துவம், அதிகாரம் ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் மிகுந்த செல்வாக்கு மிக்கப் பெண்கள் 100 பேர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இதில் முதல் பத்து இடத்தைப் பிடித்த பெண்களின் பட்டியல்...
இதில் முதலிடத்தை, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்க்கல் பெற்றுள்ளார்.
இரண்டாவது இடத்தை பிரேஸில் அதிபர் தில்மா ரூஸ்ஸப், 3-வது இடத்தை பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் நிர்வாகி மெலிண்டா கேட்ஸ், 4-வது இடத்தை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல், 5-வது இடத்தை அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் பிடித்துள்ளனர்.
இப்பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 9-வதாக இடம்பெற்றுள்ளார். பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைவர், அமெரிக்க இந்தியரான இந்திரா நூயி 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
Source : Forbes
தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteபதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை