.

Pages

Wednesday, May 8, 2013

டாக்டர் ராமதாஸ் கைதால் அதிரைப் பயணிகள் அவதி !

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனால் தமிழகம் முழுவதும் கலவரம், சாலை மறியல், பஸ்கள் மீது கல்வீச்சு, தீவைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன.

அதைத்தொடர்ந்து வட மாவட்டங்கள் மற்றும் தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல் பஸ் போக்குவரத்து குறைக்கப்பட்டன. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட பயணிகள் ரெயில்களிலும், கார்களிலும் சென்றனர். மேலும் இதுவரையில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதிரைக்கு சென்னையிலிருந்து தினமும் பத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன. இவைகள் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் அதிரையை வந்தடைந்து விடும். டாக்டர் ராமதாஸின் கைதுக்கு பின் தினமும் தாமதமாக அதிரையை வந்தடைவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இதுகுறித்து சென்னையிலிருந்து அதிரைக்கு வந்த பயணி சேஹ்னா சலீம் அவர்களிடம் பேசிய வகையில்...

'சென்னையிலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்ட பஸ் திருச்சி வழியாக 100 கிலோ மீட்டர் கூடுதலாக சுற்றிக்கொண்டு அதிரையை வந்தடைகிறது. இதனால் சுபுஹு தொழுகையை இழக்க வேண்டியுள்ளது. மேலும் வயோதியர்கள், குழந்தைகள் காலைக் கடன்களை முடிப்பதற்கும், மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு செல்வதற்கும் தாமதம் ஏற்படுகிறது' என்ற வருத்தத்தை தெரிவித்துக்கொண்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.