கூடுதல் இணைப்பின் காரணமாக இந்த டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி பழுதடைந்தது விடும். மின்சார ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரி செய்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் பழுதடைந்தது விடுகிறது. இதனால் இந்தப்பகுதியில் வாழும் பொதுமக்கள் வர்த்தகர்கள், மாணவ மாணவிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வந்தனர்.
இன்று [ 11-05-2013 ] பகல் 2.30 மணியளவில்‘டமார்’ என்ற சத்தத்துடன் டிரான்ஸ்பார்மரில் தீ பிடித்து மளமளவென பற்றி எரிந்தது. இதனால் இந்தபகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் காணப்பட்டனர்.
துரித நடவடிக்கையாக உடன் களத்தில் இறங்கிய அப்பகுதி இளைஞர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். மேலும் அதிரை மின்சார வாரியத்திற்கும் தகவல் தெரியப்படுத்தினர். இதனால் இப்பகுதி முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டன.
நன்றி :
ஆஷிக் அஹமது,
அஹமது மொய்தீன்,
KMA ஜமால் முஹம்மது
செய்தியை அதிரடியாய் பதிந்து அறியத்தந்த அதிரை நியூஸிற்கு நன்றி.
ReplyDeleteசானாவயல் சண்முகம் டீ ஸ்டால் அருகில் உள்ள பழுதடைந்த போஸ்ட் மரம் இன்னும் மாற்றாமல் உள்ளது. அசம்பாவிதங்கள் நிகழும் முன் மாற்றியாக வேண்டும் முயற்ச்சிப்பார்களா..???
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஒரு வழியா இரவு 9.00மணிக்கு சப்ளை கொடுக்கப்பட்டது.
இதைப்பற்றி விளக்கமாக ஒரு பதிவாக எழுதுவேன்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை