நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் புகைப்படம் மேலத்தெரு மேற்கு பகுதி மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்காக அதிரை பேரூராட்சி சார்பாக அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 2010-11 ம் ஆண்டில் ரூபாய் 3.50 இலட்சம் செலவில் புதிய போர் வெல் அமைக்கப்பட்டது.
இந்தப்பகுதியின் தண்ணீர் பற்றாக்குறையை நிரந்தரமாக தவிர்க்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இத்திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாகியும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் பூட்டு போட்டு பூட்டிருப்பதால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து அதிரை பேரூராட்சியின் 16 வது வார்டு உறுப்பினர் முஹம்மது யூசுப் அவர்களை அலைப்பேசியில் தொடர்புகொண்டு அவரின் கருத்தைப் பெற்றோம்...
'இப்பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்களின் தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்யும் விதமாக கடந்த 2010-11 ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்திற்கு கடந்த வருடம் தான் மின் இணைப்பு பெறப்பட்டது. குடிநீர் சீராக வழங்குவதில் சில குறைபாடுகள் இதில் உள்ளதால் காலதாமதமாகிறது. விரைவில் இவற்றை நிவர்த்தி செய்து இத்திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர முயற்சி செய்யப்படும். இதற்கு எனது ஒத்துழைப்பு என்றென்றும் உண்டு' என்றார்.
நன்றி : ஜெஹபர் சாதிக்
இன்னுமா திறக்கலே?மூன்று வருடதீர்க்கு முன்புள்ள இந்த கழிப்பிடம் இன்னும் திறக்க வில்லை அப்போ காட்டுப்பள்ளி இடத்தில் கட்டிய கழிப்பிடம் திறக்க எத்தனை ஜென்மம் காத்து இருக்கனும் மக்கள் ?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபஞ்சாயத் தலைவருக்கு தகவல் தெரிவிக்கபட்டதா ????
ReplyDelete