அதிரை அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கூல் பாலா உயிரிழந்தார்.
அதிரை, பழஞ்செட்டித் தெருவைச் சேர்ந்த கூல் பாலா என்று அழைக்கப்படும் ச. பாலு [ 42 ]. இவர் வெள்ளிக்கிழமை இரவு பட்டுக்கோட்டையிலிருந்து அதிரைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார்.
புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் சாலையோர மின் கம்பத்தில் இவரது இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பாலு அதே இடத்தில் இறந்தார்.
இது குறித்து அதிரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி : தினமணி
Rss bala??
ReplyDelete