பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை இந்த பகுதியின் வார்டு உறுப்பினர் முஹம்மது ஷரிப் அவர்கள் மூலம் அதிரை பேரூராட்சியின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து விலாரிக்காடு பகுதியிலிருந்து நேரடியாக குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் ரூபாய் நான்கு இலட்சம் செலவில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளத்தில் பைப் லைன் போடப்பட்டன.
இந்தப் பணிகளின் செய்தியை முதன் முறையாக கடந்த [ 23-04-2013 ] அன்றே தளத்தில் வெளியிட்டோம்.
அதன் தொடர்ச்சியாக அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் விலாரிக்காடு பகுதியில் இருந்து பம்ப் மோட்டாரை இயக்கிய சில நிமிடங்களிலேயே மரைக்காப் பள்ளி அருகே வைக்கப்பட்ட பைப் முனையில் தண்ணீர் வேகமாகப் பாய்ச்சிக் கொட்டியது. இதில் கலந்துகொண்ட அதிரை பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம், வார்டு உறுப்பினர் முஹம்மது ஷரிப், கான்ட்ராக்டர் சுல்தான் மற்றும் 'மணிச்சுடர் நிருபர்' சாகுல் ஹமீது ஆகியோர் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறையுடன் காணப்பட்டு வந்த இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.............. மிக துரிதமாக செயல்பட்ட அணைத்து சகோதரர்களுக்கும் எனது நன்றியும் வாழ்த்தும்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
இப்பணியை நிறைவு செய்ய பாடுபட்ட அனைவர்களுக்கும்,நன்றியுடன் வாழ்த்துக்கள்.
ReplyDelete\\இப்பணியை நிறைவு செய்ய பாடுபட்ட அனைவர்களுக்கும்,நன்றியுடன் வாழ்த்துக்கள்.//
ReplyDeleteஇது ஆரம்பம் தானுங்கோ இன்னும் நிறையா ஈக்கிது
இருந்தாலும் என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவிச்சிகிறேனுங்க
இதில் முழு முயற்ச்சி செய்த அனைவர்க்கும் எனது வாழ்த்துக்கள் தண்ணீரை வீண் விரயம் செய்யாமல் முறையாக பயன்படுதிக்கொள்ளவும்.
ReplyDelete