.

Pages

Sunday, May 19, 2013

அதிரையில் குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி மாவட்ட பேரூராட்சியின் இணை இயக்குனருக்கு பேரூராட்சித் தலைவரின் கடிதம் !

அதிரையில் குடிநீர் தட்டுப்பாடு ஆங்காங்கே முக்கிய பகுதிகளில் நிலவி வருகிறது. கடுமையான வெயிலின் தாக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், கடும் மின் பற்றாக்குறை காரணமாக அதிரையில் மின் வெட்டு பல மணி நேரங்கள் அமலில் உள்ளதால் குடிநீர் சீராக வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது.

இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என்பதைக் கருத்தில் கொண்டு புதிய போர்வெல் அமைத்தல், பராமரிப்பு மற்றும் நீர் நிலை தேக்கத் தொட்டிகளுக்கு வெள்ளை அடித்தல் ஆகிய பணிகளுக்கு வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் போதுமான நிதி ஒதுக்க வேண்டி தஞ்சை மாவட்ட பேரூராட்சியின் இணை இயக்குனருக்கு, அதிரை பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம் அவர்கள் கோரிக்கை அடங்கிய கடிதத்தை அனுப்பியுள்ளார்.

2 comments:

  1. இது ஒரு நல்ல முயற்ச்சி இதற்கான பலன் இன்ஷா அல்லாஹ் விரைவில் கிடைக்க துவா செய்வோம்.இதற்க்கு முயற்ச்சி செய்தஅதிரை பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மதுபான பாக்டரிகளுக்கு மட்டும் தடை இல்லா மின்சாரம் வழங்ககும் அரசு, அன்றாட தேவையான குடிநீர் நிலையங்கல்லுக்கு ஏன் வழங்க வில்லை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.