அதிரை காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன், காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் A. ஜலால், காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி, காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் ராமச்சந்திரன், கால்பந்தாட்டக் கழக தஞ்சை மாவட்டத் தலைவர் கோபாலக்கிருஷ்ணன் ஆகியோர் இன்றைய முதல் ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.
இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தஞ்சாவூர் அணியினரோடு கண்டனூர் அணியினர் மோதினர். இதில் தஞ்சை அணியினர் 1 கோல் அடித்து 1-0 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றனர். இன்றைய முதல் ஆட்டத்தைக் காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.
நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் பொதக்குடி அணியினரோடு மேலநத்தம் அணியினர் மோத உள்ளனர்.
நன்றி : ஆஷிக் அஹமது / அஹமது மொய்தீன் / இத்ரீஸ்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteசெய்தி அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteநமதூர் அணி வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteis it free or Entry Ticket?
ReplyDeleteIt is 100 % free :)
Delete