.

Pages

Tuesday, May 7, 2013

ADT யின் அங்கமாகிய 'இஸ்லாமிக் மிஷன்' நடத்தும் கோடைகால பயிற்சி முகாம் !

அதிரை தாருத் தவ்ஹீத்தின் [ ADT ] அங்கமாகிய 'இஸ்லாமிக் மிஷன்' ஆண்டு தோறும் கோடை விடுமுறையில் நடத்துகின்ற பள்ளி - கல்லூரி மாணவ / மாணவியருக்கான இஸ்லாமிய நல்லொழுக்க பயிற்சி முகாம் கடந்த [ 05-05-2013 ] அன்று முதல் CMP லேனில் அமைந்துள்ள AL மெட்ரிக் பள்ளியில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இதில் ஏராளமான மாணவ, மாண‌விகள்  சேர்ந்து  நல்லொழுக்கங்களையும் மார்க்க கல்வியையும் ப‌யின்று வருகின்றனர். மாணவ / மாணவிகளுக்கு தனித்தனியாக வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படுள்ளது. இதில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

 





'இதன் நிறைவு நாளான்று பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதில் நல்லொழுக்கப் பயிற்சியில் பங்கு பெற்ற மாணவ / மாணவிகளின் சிறப்பு நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து பரிசளிப்பும் நடைபெறும்' என ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. கோடையை வீண் விரயம் இல்லாமல் மாணவ மாணவிகளுக்கு அமைத்துகொடுத்த அதிரை தாருத் தவ்ஹீத்தின் அமைப்புக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.