பெய்ஜிங்: சீனாவின் சான்ஷி மாகாணத்தில் 3 மணி நேரத்தில் 2 மாடி வீடு அமைத்து புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
அடிப்படைத் தேவை வரிசையில் வீடு என்பது பிரதானமானது. இன்னமும் குடியிருக்க வீடுகள் இல்லாமல் சாலையோரங்களில் வசிப்பவர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டேதான் போகின்றன. இந்நிலையில் சீனாவில் 3 மணி நேரத்தில் 2 மாடி வீடு கட்டி ஒரு கட்டுமான நிறுவனம் அசத்தியுள்ளது. சான்ஷி மாகாணத்தில் ஸியான் என்ற இடத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த வீட்டைக் கட்ட கட்டுமான நிறுவனம் ‘3டி பிரிண்டிங்’ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதற்கான மாடல்கள் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டன. அதி நவீன தொழில் நுட்ப முறையில் வீடு கட்ட சதுர மீட்டருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகியதாகக் கூறப்படுகிறது. வீட்டின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டு ‘கிரேன்’ மூலம் தூக்கி பொருத்தப்பட்டது. இந்த வீடு சமையலறை, படுக்கையறை, ஓய்வு அறை மற்றும் ஹால் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
தொழிற்சாலை மற்றும் விவசாயி கழிவுகளை மூலப் பொருட்கள், கட்டுமான பொருட்களாக பயன்படுத்தப்பட்டன. இது போன்ற வீடு கட்டுவதன் மூலம் போக்குவரத்து, ஆட்கள் கூலி, பொருட்கள் போன்றவற்றின் செலவு குறையும். கால நேரமும் மிச்சமாகும் என்பதால் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
3 மணி நேரத்தில் 2 மாடிகளுடன் கட்டப்பட்ட இந்த வீடு 9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டாலும் அதைத் தாங்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என பொறியியாளர்கள் கூறியுள்ளனர்.
நன்றி:விகடன்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.