நண்டுகளில் சம்பா நண்டு, நெடுங்கால் நண்டு, கண் நண்டு, தில்லை நண்டு, சுரக்காய் நண்டு, தொப்பு நண்டு, சிலு நண்டு, கல் நண்டு என பல வகைகள் உள்ளன. இதில் தில்லை நண்டு மட்டும் கடல் ஓரத்தில் காணப்படும் அலையாத்தி காடுகள் நிறைந்த சதுப்பு நிலப்பரப்பில் பொந்தில் வாழக்கூடியவை. மற்ற வகை நண்டுகள் கடல் நீரில் வாழும்.
கடல் ஓரத்தில் ஏராளமான தில்லை மரங்கள் காணப்படுகின்றன. இந்த மரத்தின் அடியில் உள்ள பொந்தில் வாழக்கூடிய நண்டுகளை 'தில்லை நண்டு' என்ற பெயரில் மீனவர்கள் அழைத்து வருகின்றனர். மேலும் 'கடுக்கா நண்டு' என்ற பெயரிலும் இவற்றை அழைப்பதுண்டு.
பெரும்பாலான மீனவர்கள் இந்த நண்டை பிடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. தில்லை நண்டை பிடிப்பதற்கு என்று சில மீனவர்கள் உள்ளனர். குறிப்பாக அதிரை சுற்றுவட்டார கிராமப்பகுதியாகிய பழஞ்சூர், துவரங்குறிச்சி, செங்கபடுத்தான்காடு ஆகிய பகுதிகளில் தில்லைநண்டு பிடிக்கும் மீனவர்கள் உள்ளனர். இவர்கள் தான் தொன்றுதொட்டு தில்லை நண்டுகளை பிடித்து கிராமப்பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நண்டுக்கு கிராம பகுதிகளில் நல்ல கிராக்கி உள்ளது.
இதுகுறித்து தில்லை நண்டு பிடிக்கும் மேலப்பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்த மீனவர் வைத்திஸ்வரன் நம்மிடம் கூறியதாவது...
தில்லை மரத்தின் அடிதில் வாழ்ந்து வருவதால் இந்த நண்டிற்கு 'தில்லை நண்டு' என்று பெயர் வந்தது. மருத்துவ குணம் உடையது. மூலச்சூட்டுக்கு அரிய வகை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நண்டை பிடிப்பது மிகவும் சிரமம். சதுப்புநிலப் பகுதியில் உள்ள பொந்துக்குள் இந்த நண்டுகள் இருக்கும். நாங்கள் பொந்துக்குள் கையை விட்டு பிடிப்போம். பொந்தில் சில சமயம் பாம்புகள் இருக்கும் சில நேரங்களில் அந்த பாம்பு கடித்துவிடும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவோம். ஒரு பொந்தில் 4 நண்டுகள் இருக்கும் ஒரு நண்டின் விலை ரூ 5 க்கு விற்பனை செய்கிறோம். அதிக சத்துள்ளதால் கிராமப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் இந்த நண்டை வாங்கி செல்கின்றனர்' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.