.

Pages

Wednesday, July 29, 2015

முத்துப்பேட்டை மாணவனின் புதிய கண்டுபிடிப்பு !

முத்துப்பேட்டை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன் அஜய் சமீபத்தில் சைக்கிள் மூலம் 'எளிய நீர் இறைக்கும் இயந்திரம்' ஒன்றை கண்டுப்பிடித்தார். அந்த இயந்திரம் கடந்த 11-ம் தேதி மன்னார்குடியில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்று மாவட்ட அளவில் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவன் அஜயிக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி தலைமை ஆசிரியை வாசுகி தலைமையில் நடைபெற்றது.

இதில் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் கலந்துக் கொண்டு மாணவனைப் பாராட்டி பேசி பரிசு வழங்கினார். அதே போன்று பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் மாணவனுக்கு உதவியாக இருந்த அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சுரேஷ் ஆகியோரையும் பாராட்டி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சகாதேவன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சூசைரெத்தினம், ஆசிரிய பயிற்றுனர் முத்தனா மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், கிராம முக்கிய பொருப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.