.

Pages

Sunday, July 26, 2015

பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் !

தஞ்சாவூரில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் இன்று  24 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு 4473 விலையில்லா மிதிவண்டிகள் மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் வழங்கினார்.  விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் தலைமை தாங்கினார்.

விழாவில் மாநில அமைச்சர் பேசியாதவது:
மாண்புமிகு தமிழக முதல்வர்கள் அவர்கள் மூன்றாவது முறையாக பதவியேற்று பல அற்புத திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.  விஷன் 2023 என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கு அடிப்படையே கல்வியாகும். வெளிநாட்டிற்கு இணையாக அனைத்து துறைகளையும் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உயர்த்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.  மற்ற துறைகளை காட்டிலும் பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறைக்கு 2011ம் ஆண்டில் ரூ.20 ஆயிரம் கோடியும், 2012ம் ஆண்டில் ரூ.22 ஆயிரம் கோடி என கடந்த நான்கு ஆண்டில் சுமார் ரூ.1 இலட்சம் கோடிக்கு மேல்  நிதி ஒதுக்கீடு செய்து, கல்வி பயில்கின்ற மாணவ மாணவியர்களுக்கு  சீருடை என அனைத்து  உதவிகளையும் செய்து வருகிறார்கள்.
 
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2015-16ம் கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 22 ஆயிரத்து 35 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும். தற்போது முதற்கட்டமாக 24 பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 4473 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டள்ளன.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பொறியியல் கல்லூரி, ஒரு கால்நடை அறிவியல் ஆராய்ச்சி நிலையம், ஒரு கலை அறிவியல் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை தொடங்கியுள்ளார்கள். இதற்கெல்லாம் அடிப்படை அனைத்து மாணவ மாணவியர்கள் 100 சதவிகிதம் கல்வியறிவு பெற வேண்டும். உயர்க்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்க வேண்டும்.

உலக அறிவை பெற வேண்டும் என்பதற்காக மடிக்கணினி திட்டத்தை அறிவித்து வசதி படைத்த குடும்பங்களை சார்ந்த மாணவ மாணவியர்கள் எளிதாக மடிக்கணினியை பெறுவதை போல் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ மாணவியர்களுக்;கும் மடிக்கணினி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.  கணினி அறிவு இல்லாதவர்கள் படித்தும் பயனில்லை என்பதால் அனைவரும் கணினி அறிவு பெற இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது.

அனைத்து துறைகளுமே கணினிமயமாக்கப்பட்டுள்ளதால் இதை உணர்ந்த மாண்புமிகு  முதல்வர் அவர்கள் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கி வருகிறார்கள்.  வருடாவருடம் ரூ.1 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்து விலையில்லா மடிக்கணினி வழங்கி வருகிறார்கள். இது போன்ற முன்னோடி திட்டங்களை மற்ற மாநில முதல்வர்களும் பின்பற்றக் கூடிய அளவிற்கு முன்னோடி திட்டமாக விளங்கி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவ மாணவியர்கள் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து வருகிறார்கள்.  சிறப்பாக படித்தால் வெளிநாட்டு சென்று படிக்கக்கூடிய மாணவர்கள் மற்றும் பயிற்சி பெறுகின்ற ஆசிரியர்களுக்கு செலவை அரசே ஏற்கும் என மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை விட அரசு பள்ளிகளில் கூடுதல் வசதி செய்யப்பட்டு வருகிறது.

பள்ளியில் சேருகின்ற குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை அனைத்து உதவிகளும் மாண்புமிகு முதல்வர் வழங்கி வருகிறார்கள். உதவிகளை பெறுகின்ற மாணவ மாணவிகள் ஒரே சிந்தனை கல்வி கற்பது ஒன்று தான். பள்ளி மாணவ மாணவியர்கள் நன்றாக படித்து வீட்டிற்கும், நாட்டிற்கும்  பெருமை சேர்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு அமைச்சர் பேசினார்.

விழாவில் சட்ட மன்ற உறுப்பினர்கள் திரு.எம்.ரெங்கசாமி (தஞ்சாவூர்), மாண்புமிகு மாநகர மேயர் திருமதி.சாவித்திரி கோபால், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.துரை.திருஞானம், மாவட்ட பால்வள கூட்டுறவு சங்கத் தலைவர் திரு. ஆர்.காந்தி, துணை மேயர் திரு.மணிகண்டன், மொத்த கூட்டுறவு பண்டக சாலை திரு.வி.பண்டரிநாதன், துணைத் தலைவர் திரு.வேங்கை கணேசன், நிக்சல்சன் கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.அறிவுடைநம்பி, துணைத்தலைவர் திரு.புண்ணியமூர்த்தி,  முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ரெ.திருவளர் செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் திரு.ரெங்கநாதன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியையகள், மாணவ மாணவியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

1 comment:

  1. விலையில்லா பொருள்களால் மக்களுக்கு நன்மையிருக்கோ இல்லையோ தற்பொழுது மாணவ சமுதாயத்தை சீரழிப்பது மது;பள்ளி மாணவர்கள் இடையே சிகரெட், மது, போதை பாக்கு உட்கொள்ளும் தீய பழக்கங்கள் அதிகரித்து வருகின்றன; மாணவ சமுதாயத்தை காப்பாற்ற, கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    எதிர்காலத்தில், அதற்கு நிரந்தர அடிமைகளாகி விடுகின்றனர். படிப்பில் கவனம் செலுத்த முடியாமல், உடல் நலம், மனநலம் பாதிக்கப்பட்டு, அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறி விடுகிறது.எதிர்காலம் குறித்த விழிப்புணர்வும், வாழ்க்கையை பற்றிய புரிதலும் இல்லாததே, இதுபோன்ற பழக்கத்துக்கு வழிவகுக்கிறது.

    மதுக்கடை மூட கலக்டர் ஆவண செய்வாரா.....?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.