.

Pages

Saturday, July 25, 2015

போலிகளை வாங்கி ஏமாறாதீர்கள் - கலெக்டர் எச்சரிக்கை!

போலி உரங்களை வாங்கி ஏமாற வேண்டாம் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:

"தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகமாக காய்ப்பதற்கு என்று பொய்யான தகவல்களைக் கூறி போலி நுணணூட்ட உரங்கள் மற்றும்  மைக்ரோ ஆர்கானிக் போன்ற உரங்கள் கார் மூலம் நேரடியாக விற்பனை செய்து விவசாயிகளை ஏமாற்றி வருகின்றார்கள்.

இது போன்ற உரங்கள் வேளாண் துறையினரால் எந்த விவசாயிகளுக்கும் நேரடியாக விநியோகம் செய்வது நடைமுறையில் இல்லை. வேளாண் துறையினரால் உரிமம் பெற்றவர்கள் நுண்ணூட்டக் கலவை உர உற்பத்தியாளர்கள் தனியார் உரம் மற்றும் ப+ச்சி மருந்து கடைகள் வழியாகவே விற்பனை செய்கிறார்கள். வேளாண் துறையினரால் அங்க Pகரிக்கப்பட்ட நுண்ணூட்டக் கலவை ஜிப்சம், திரவ உயிர் உரங்கள் மற்றும் உயிர் உர பொட்டலங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகள் நடமாடும் வாகனத்தில் விற்பனை செய்கின்ற எந்த ஒரு நுண்ணூட்ட கலவை மற்றும் உயிர் உரங்களை வாங்கி உபயோகப்படுத்த வேண்டாம் என்றும் சந்கேத்திற்குரிய இது போன்ற விற்பனையாளர்களை பற்றிய விவரங்கள் தெரிவித்தால், உடனடியாக அருகில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநர்களிடம் தெரிவிக்க கேட்டுக் கொள்கிறேன்.

அம்மாபேட்டை வட்டாரம் களஞ்சேரி பகுதியில் போலி அடையாள அட்டை தயாரித்து போலி தென்னை மர நுண்ணூட்ட மருந்தினை விற்பனை செய்த திரு.துரைமுருகன், திரு.ராஜீ ஆகிய இருவரும் அம்மாப்பேட்டை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாயிகள் ஏமாற்றி போலி உரங்களை விற்பனை செய்தவர்கள் ம Pது காவல் துறை மூலம் உரிய நடடிவக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் அனைவரும் தனி நபர்கள் மூலம் உரிமம் பெறாத போலி உரங்களை வாங்கி ஏமாற வேண்டாம்.

வேளாண்மைத் துறையினரால் உரிமம் பெறாத போலி உரங்களை தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன், ஐ.ஏ.எஸ், அவர்கள் எச்சரித்துள்ளார்.

1 comment:

  1. நிறைய விளைச்சல் கிடைக்க வேண்டும் என்று, கண்ட ரசாயனங்களையும் விளைநிலத்தில் கொட்டுவது, போதை மருந்தை உட்கொண்டு, விளையாட்டு போட்டியில் பங்கேற்பதை போலத்தான். அதில் வெற்றி கிடைக்காது; கிடைத்தாலும் நிலைக்காது.மனிதர்களின் பேராசை தான் அதையெல்லாம் செய்யத்தூண்டுகிறது. இதனால் இயற்கை சீர்கெட்டு, மனிதன் அழிவை சந்திக்கிறான். இயற்கை உரத்தினை பயன்படுத்துங்கள் செலவும் குறைவு.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.