.

Pages

Saturday, July 18, 2015

கடற்கரைத் தெரு ஜும்ஆ பள்ளியில் பெருநாள் கொண்டாட்டம் [படங்கள்]

அதிரையில் இன்று காலை ரமலான் பெருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.  கடற்கரைத் தெரு ஜும்ஆ பள்ளியில் இன்று காலை பெருநாள் தொழுகை நடைபெற்றது. தொழுகையை பள்ளி இமாம் மெளலவி சபியுல்லாஹ் அன்வாரி நடத்தினார். இதில் கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள், அமீரக கடற்கரைத்தெரு நிர்வாகிகள், தீனுல் இஸ்லாம் இளைஞர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அப்பகுதியினர் திரளாக கலந்துகொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர். இந்த பகுதியின் வார்டு கவுன்சிலர் சேனா மூனா ஹாஜா முகைதீன் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்து கூறினார்.

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    EID MUBARAK.

    நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.
    2015-1436

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.

    ReplyDelete
  2. மண்ணின் மைந்தர்களுக்கு அடியேனின் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.அல்ஹம்துலில்லாஹ் .

    ReplyDelete
  3. நபிகள் நாயகத்தின் (ஸல் ) அவர்களின் போதனைகளான, ஈகை, கருணை, அன்பு, மனிதநேயம், சினம் தவிர்ப்பு, ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட நாம் உறுதியேற்போம்!

    அனைவருக்கும் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.