.

Pages

Wednesday, July 22, 2015

மருத்துவர்கள் அணியும் வெள்ளை அங்கியால் நோய் தொற்று அபாயம்: ஆய்வில் தகவல்!

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் அணியும் வெள்ளை நிற அங்கியால் (கோட்) அதிகமான நோய் தொற்று பரவுவதாக ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள எனேபோயா மருத்துவக் கல்லூரியில் முதுகலை பயிலும் பெர்னாண்டஸ் செய்த ஆராய்ச்சியில், வெள்ளை நிற அங்கிகள் மூலமாக நோய் தொற்று அதிகமாக பரவுவதாக கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள ஆராய்ச்சி அறிக்கையில், ''19ஆம் நூற்றாண்டில் இருந்து இந்தியாவில் மருத்துவர்கள் வெள்ளை நிற அங்கியை அணிந்து வருகின்றனர். ஆனால், தற்போது இந்த அங்கியால் நோயாளிகளுக்கு தொற்று அதிகமாக பரவுகிறது.

மேலும், மருத்துவ மாணவர்கள் வெள்ளை நிற அங்கியை அணிந்து கொண்டு வெளியில் செல்வதால் மருத்துவமனைக்கு வெளியிலும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பயன்படுத்தும், நாற்காலிகள் மற்றும் மேஜைகளிலும் நோய் தொற்று கிருமிகள் ஒட்டிக் கொள்கின்றன.

எனவே, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் வெள்ளை நிற அங்கி அணிய இந்திய சுகாதார அமைச்சகம் தடை விதிக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு மருத்துவர்கள் வெள்ளை நிற அங்கிகளை அணிய ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தது. ஆனால், 2009ஆம் ஆண்டு, பாரம்பரியத்தை மாற்ற முடியாத என அமெரிக்கா தடை விதிக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி:விகடன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.